எதுக்கு சிரிச்சன்னு கேட்டா இதுலயும் ஜாதியை சொல்லி மழுப்புவீங்களா? மீண்டும் சர்ச்சையான ரஞ்சித்தின் பதில்.

0
417
- Advertisement -

திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பா. ரஞ்சித் செய்து செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகிவரும் நிலையில் அவரை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பிகே திரைப்பட விழா குறித்த செய்திகள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தங்களுடைய நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழாவை வருடம் வருடம் நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழா கடந்த எட்டாம் தேதி தொடங்கி நேற்று முன் தினம் தான் நிறைவடைந்து இருக்கிறது. இந்த விழாவில் நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலந்து இருந்தார்கள். இதில் தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல மொழி திரைப்படங்கள் மற்றும் ஆவண படங்கள் திரையிடப்பட்டது.

- Advertisement -

பிகே ரோஸி திரைப்பட விழா:

அதோடு பல்வேறு தலித் இயக்குனர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலித் சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். கேரளா திரைப்படத் துறையில் தலித் இயக்கம் பரவுவதில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள். அந்த வகையில் மலையாள இயக்குனர் பிஜு தாமோதரன் அவர்கள் பல விஷயங்களை பகிர்ந்தார். அப்போது அவர் மேடையில் காலா படத்தில் ரஜினிகாந்த் போன்ற ஒரு ஸ்டார் நடித்ததை பெரிய விஷயம்.

மேடையில் ரஞ்சித் செய்தது:

அது ரஞ்சித்தின் அரசியல் என்று ரஜினிகாந்துக்கு தெரியுமா? என்பது சந்தேகம் தான் என்று சொன்னவுடன் ரஞ்சித் மேடையிலேயே நக்கலாக சிரித்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் அங்கிருந்த எல்லோருமே சிரித்து இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலருமே, நன்றியை மறக்கக்கூடாது. ரஜினியை வைத்து படம் பண்ணிய நான் தான் நீ இந்த இடத்தில் இருக்கிறாய்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் கண்டனம்:

ரஜினியை வைத்து படம் எடுப்பதற்கு முன்பு இருந்த ரஞ்சித்துக்கும், இப்போது இருக்கும் ரஞ்சித்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்றெல்லாம் மோசமாக இயக்குனர் ரஞ்சித்தை திட்டி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ ரஜினி ரசிகர்கள் பலரும் ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் எக்ஸ் தளத்தில் ‘நன்றி கெட்ட ரஞ்சித்’ என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

ரஞ்சித் விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரஞ்சித் ‘எதை தடையாக நினைக்கிறோம் என்பதற்கு பதில் தேட வேண்டிய அவசியம் இருக்கிறது. சும்மா சிரிச்சதுக்கு எல்லாம் பயங்கர அர்த்தங்களை கண்டு பிடிக்கும் இடத்தில் நம் சிரிப்பு எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை புரிந்துகொள்ள தேவை இருக்கிறது. இந்த சமூகத்தில் இந்த காலகட்டடத்தில் இந்த நேரத்தில் விழுப்புணர்வு அடையவில்லை என்றால் எப்போதும் அடைய முடியாது’ என்று கூறியுள்ளார். இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் ‘இப்ப கூட ஜாதி குள்ள தான் போய் ஒளிஞ்சிக்கிறான்’ என்று மீண்டும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement