தமிழில் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஷி கண்ணா.
இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் காபே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.
இதையும் பாருங்க : போன் ரிப்பேர் செய்து விட்டு டிப்ஸ் கேட்ட ஊழியர்.! தர மறுத்துள்ள அஜித்.! ஆன இப்படி ஒரு உதவி செஞ்சிருக்கார்.!
இமைக்கா நொடிகள் படத்திற்க்கு பின்னர் ஜெயம் ரவியுடன் ‘அடங்கமறு’ படத்தில் நடித்திருந்தார். இறுதியாக விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்கியா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழ், தெலுங்கு என்று பிசியாக நடித்து வருகிறார் அம்மணி.
தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சங்கத் தமிழன்’, ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரஷி கண்ணா அட்டை படத்திற்காக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள ரஷி கண்ணாவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போய்யுள்ளனர்.