கொரோனா வைரசினால் உலகமே தற்போது ஆடிப்போய் உள்ளது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் உலக மக்கள் அனைவரும் பரிதவித்துப் போய் உள்ளார்கள். நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசாங்கம் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க மோடி அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பலரும் பங்கு பெற்றார்கள். இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்து உள்ளது. இதனை அடுத்து பல பேருக்கு மருத்துவ சோதனை செய்பட்டு அவர்களை தனிமை படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இதையும் பாருங்க : ‘இவன் எப்படி டா நயன்தாராவ கரெக்ட் பண்ணான்’ நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் போட்ட கேப்ஷன். கடுப்பான ரசிகர்கள்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் முஸ்லீம்களால் தான் பரவுகிறது என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும், சோசியல் மீடியாவில் ஒரு சில பேர் இதை காரணமாக வைத்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து நடிகை ராசி கண்ணா அவர்கள் தன்னுடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,
99.99 சதவீதம் இந்துக்கள் கோமியம் குடிப்பதில்லை. கொரோனா வைரஸை கோமியம் குணப்படுத்தும் என்று இந்துக்கள் நம்புவதில்லை. 99.99% முஸ்லிம்கள் தப்லீக் ஜமாஅத் நிகழ்வை ஆதரிக்கவில்லை. அந்த நிகழ்வில் மவுலானா சாத் சொன்னதை ஏற்கவுமில்லை. கொரோனா வைரஸ் எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்லை. அது மதச்சார்பற்ற கொடிய உயிர்க்கொல்லி.
இதையும் பாருங்க : இந்தியாவை விட்டு ஒழித்துக்கட்ட வேண்டிய இரண்டு விஷயங்கள். ஒன்று கொரானா மற்றொன்று ? அப்துல் காலிக் பதிவு.
மேலும், கொரோனா மதத்தின் அடிப்படையில் மக்களை பாதிப்பது இல்லை. ஜாதி, மதம், ஏழை,பணக்காரன் என யாரையும் பார்ப்பதில்லை. பெரியவர்கள்,சிறியவர்கள் என ஒருவரை கூட விட்டு வைக்காமல் தாக்கி கொன்று வருகிறது. இப்படி மதங்கள் மீதும், மூட நம்பிக்கைகளின் மீதும் குறை சொல்வதை நிறுத்திவிட்டு அனைவரும் ஒன்றாக செயல்பட்டு கொரோனாவை எதிர்த்து போராடுவோம். இந்த போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். கூடிய விரைவில் இந்த கொரோனாவை நம் நாட்டை விட்டு அடித்து துரத்துவோம் என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை ராசி கண்ணா. இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் பேமஸ் லவர் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.