ராஷ்மிகாவின் Deep Fake வீடியோ – சிக்கிய 19வயது சில்லிவண்டு. விசாரணையில் அவர் சொன்ன காரணம்.

0
252
- Advertisement -

சமீபத்தில் இணையத்தில் வைரலான ராஷ்மிகா மந்தனாவின் மார்ப் வீடியோ விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யபோட்டுள்ளார். சமீப காலமாகவே தொழில்நுட்பம் வளர்வதன் மூலம் நிறைய விளைவுகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பல பேருடைய வாழ்க்கையும் சீரழித்து வருகிறார்கள். இதில் அதிகம் பெண்கள் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.பெண்களின் புகைப்படத்தை மாபிங்க் செய்து அதை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அரைகுறை ஆடையுடன் லிப்டில் ராஸ்மிகா நுழைவது போன்று ஒரு வீடியோ வெளியாகியது.

-விளம்பரம்-

இதுகுறித்து பலருமே பலவிதமான கமெண்ட்களை போட்டிருந்தார்கள். ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருந்தது ராஷ்மிகா கிடையாது. அது செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா மாற்றப்பட்டு இருப்பது என்று தெரிய வந்தது. இதுகுறித்து இது குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன் கண்டித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா டீவ்ட் போட்டு இருந்தார். அதில் அவர், சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake வீடியோவை பற்றி பேசுவதற்கு வருத்தமாக இருக்கிறது. உண்மையாக இப்படியான ஒன்று எனக்கு மிகவும் பயத்தை உருவாக்கி இருக்கிறது.நான் மட்டுமல்ல இன்றைய உலகில் இந்த தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதால் பலரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

இன்று நான் ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும் என்னுடைய குடும்பம், நண்பர்கள், என்னை பாதுகாப்பவர்கள் உள்ள்ட்டோருக்கு நன்றியுடன் இருக்கிறேன். ஆனால், இந்த மாதிரியான ஒன்று என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நடந்து இருந்தால் அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.இதனால் இதன் மூலம் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக இது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவை பரப்பியதாக 19 வயது இளைஞர் ஒருவரை போலீசார் விசாரித்தனர். இந்திய தண்டனை சட்டப் பிரிவு போலியாக உருவாக்குதலுக்கான தண்டனைப் பிரிவு 465, நற்பெயரை கெடுக்கும் வகையில் மோசடி செய்தலுக்கான தண்டனைப் பிரிவு 469, தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவுகளுக்கான 66 சி மற்றும் 66 இ பிரிவுகளுக்கான இணைவு நடவடிக்கைகளின் கீழ், கடந்த நவம்பர் 10ஆம் தேதி டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு முதல் தகவல் அறிக்கையினைப் பதிவு செய்தது.

மேலும் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் அந்த வீடியோவை தான் இன்ஸ்டாகிராமில் இருந்து பதிவிறக்கம் செய்த பின்னரே தன்னுடைய சமூக வலைதளத்தில் அப்லோட் செய்ததாக கூறியிருந்தார். தற்போது அந்த நபரின் கைப்பேசியை ஆராயும் பணியில் டெல்லி காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement