8 வயசுல ஆப்ரேஷன்,11 வருஷம் அப்பா இல்லாம இருக்கேன் – ட்ரோல்களால் மனம் நொந்து அர்ச்சனா மகள் வெளியிட்ட பதிவு.

0
552
- Advertisement -

தமிழில் 90 ஸ்களில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்து ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா. அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் அர்ச்சனா தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தார். மேலும், நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

- Advertisement -

அதனை தொடர்ந்து அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதே போல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர். என்னதான் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அதிலும் குறிப்பாக அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் தான் அவருக்கு ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்கள். தற்போது சாராவும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்று வருகிறார். அதே போல படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் சாரா. இருந்தாலும் சாராருடைய செயல்களை குறித்து சோசியல் மீடியாவில் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் சோசியல் மீடியாவில் தன்னை குறித்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சாரா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய மெச்சூரிட்டி இன்னும் ஏன் மீடியாவில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது? மக்கள் என்னுடைய குணத்தை பற்றி தவறாக பேசுவதை நிறுத்த வேண்டும். கடந்த சில வருடங்களுக்கு முன் நான் கொடுத்த பேட்டியின் சில நிமிட காட்சியை சேனல் வெளியிட்டது. அதில் ஸாராவுக்கு இவ்வளவு மெச்சூரிட்டியா என்று தலைப்பு போடப்பட்டு இருந்தது.

இதற்கு ஒரு தரப்பு எனக்கு போதுமான மெச்சூரிட்டி இல்லை என்றும் இன்னொரு தரப்பு அதிகமான மெச்சூரிட்டி இருக்கிறது என்று என்னை தவறான வார்த்தைகளை கொண்டு ட்ரோல் செய்தனர். மெச்சூரிட்டி என்பது வாழ்க்கையின் சூழ்நிலைகளுடன் நேரடித் தொடர்பை கொண்டது. நான் 8 வயதில் ஒரு அறுவை சிகிச்சை செய்தேன். நான் கிட்டத்தட்ட 11 வருடங்கள் என் தந்தையை விட்டு வாழ்ந்து வருகிறேன். என்னுடைய அம்மா மீது தவறு இல்லையென்றாலும், அன்பு, வெறுப்பு ஆகியவற்றுடன் அவர் போரிடுவதை நான் பார்த்து இருக்கிறேன்.

ஒரு கட்டத்தில் அவர் தன்னை இழந்து, அறுவை சிகிச்சை மூலம் உயிர்பித்து வந்தார். என்னைப்பற்றி பலதரப்பட்ட கருத்துக்கள், பலதரப்பட்ட தளங்களில் பேசப்படுகிறது. அதற்காக நன்றி. நான் ஒரு பகுதியளவு பொது வாழ்க்கையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன் என்பதையும், மக்களின் கருத்துக்களுக்கு நான் உட்பட்டவள் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னுடைய மெச்சூரிட்டி மற்றும் மெச்சூரிட்டி இல்லாத தன்மை என்பது சமாளிக்கும் அளவிலேயே இருக்கிறது. இதில் ஈசியான விஷயம் என்னவென்றால், தவறான கமெண்டை மிக சாதாரணமாக பதிவிட்டு விட்டு கடந்து செல்வது. நான் என்னுடைய பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாகவே, என்னை விமர்சிக்கிறீர்கள். என்னுடைய குணத்தை தாக்கி பேசுகிறீர்கள். கொஞ்சமாவது ஒரு நிமிடம் நின்று யோசித்து பாருங்கள். இது என்னையும், என்னுடைய குடும்பத்தின் மனநலத்தையும் எந்தளவு பாதிக்கும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement