தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்திலிருந்தே இன்று வரை மக்கள் மத்தியில் சீரியல்கள் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதிலும் சமீப காலமாகவே தொலைக்காட்சி சீரியல்கள் தான் கொடிகட்டிப் பறக்கின்றது. வெள்ளித்திரை படங்களை விட சின்னத்திரை சீரியல்களை தான் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். இதனால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் திருப்பங்களுடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் சன் டிவி நிறுவனமும் பல மாற்றங்களுடன் சீரியல்களை ஒளிபரப்புகிறது. சன் டிவி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சீரியல்கள் தான். அந்த அளவிற்கு சன் டிவி சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக இடம் பிடித்து வருகிறது. அதிலும் தற்போது சன் டிவியில் நிறைய சீரியல்கள் டாப் ரேட்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது. மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லாம் சீரியல்களும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் சீரியல்களில் வானத்தைப்போல சீரியலும் ஒன்று.
இதையும் பாருங்க : பிரியங்காவிற்கு அக்ஷரா மேல் அப்படி என்னதான் வெறுப்பு ? – ஏன் இப்படி சொல்கிறார் ?
இந்த சீரியல் சமீபத்தில் தான் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது பல திருப்பங்களுடன் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. வானத்தைப்போல சீரியல் முழுக்க முழுக்க அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்ட கதை. இந்த சீரியலில் இந்த வாரம் துளசி யாரை திருமணம் செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்புடன் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெற்றி– துளசியும் காதலித்து வருவது துளசியின் அண்ணனுக்கு தெரியாது. துளசி தன் அண்ணனுக்காக மாமாவை திருமணம் செய்ய ஒத்துக் கொள்கிறார்.
வெற்றி துளசியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல முயற்சி செய்கிறார். இந்நிலையில் இந்த திருமணத்தை நிறுத்த வெற்றி அவர்கள் பெண் வேடம் போட்டு சில பிளான் எல்லாம் செய்திருக்கிறார். தற்போது வெற்றி பெண் வேடம் போட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அடடா! இது வெற்றியா பார்ப்பதற்கு பெண் போல அழகாக இருக்கிறார் என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்களை போட்டு வருகிறார்க. மேலும், சீரியலுக்காக வெற்றி பெண் வேடம் எல்லாம் போட்டு இருக்கிறாரே என்று ஆச்சர்யத்தில் உறைந்து உள்ளார்கள். இந்த வாரம் வானத்தை போல சீரியலில் பல ட்விஸ்ட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.