'இன்கேம் இன்கேம் காவாலி' என்ற ஒரு பாடல் மூலம் இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். தற்போது தென்னிந்திய சினிமா உலகில் நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . அது மட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். பின் இவர் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர்.

இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு நடிகை ராஷ்மிகா அவர்கள் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா - ரக்ஷித் ஷெட்டி :
அதேபோல் விஜய் தேவேர்கொண்டாவும் தமிழ்,தெலுங்கு என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்றைய இளைஞர்களின் ரீல் ஜோடியாக விஜய் தேவர்கொண்டா - ராஸ்மிகா திகழ்கிறார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும், ராஷ்மிகாவுக்கும் நிச்சயதார்த்தம் ஆகி இருந்தது. பின் 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவருடைய திருமணம் நிச்சயதார்த்தத்தில் முடிந்துவிட்டது. ஆனால், சில மாதத்தில் இவர்கள் உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்திருந்தார்கள்.

விஜய் தேவர்கொண்டாவுடன் திருமணமா :
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதற்கு பிறகு ராஷ்மிகா மந்தனா படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். மேலும், விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா உடைய காம்பினேஷனில் வந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதனால் இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்று எல்லாம் கூறினார்கள். அதோடு இவர்கள் வெளியில் ஒன்றாக சுற்றும் போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்கிறார்கள் என்று வதந்திகள் எல்லாம் பரவியது.

ராஷ்மிகா விளக்கம் :
இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த ராஷ்மிகா, இது வெறும் டைம் பாஸ் வதந்தி. எனக்கு கல்யாணத்துக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு. நேரம் வரும்போது திருமணம் செய்து கொள்வேன். எழுதப்பட்ட அந்த வதந்திகள் அனைத்திற்கும், அது அப்படியே இருக்கட்டும்னு விட்டுற்றேன் என்று கூலாக பதில் அளித்துள்ளார். ஏற்கனவே இந்த வதந்தி குறித்து விளக்கமளித்த விஜய் தேவரகொண்டா 'நான்-சென்ஸ்' என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல ஒருவர் அமைய வேண்டும் :
அதே போல ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா, எனக்கு தெரியவில்லை. திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு இன்னும் வயதாகவில்லை. நான் அதைப்பற்றி யோசிக்க வில்லை. ஆனால் கம்போர்ட் ஆக வைத்து கொள்பவராக அமைய வேண்டும் என தன் விருப்பத்தை தெரிவித்திருந்தார். இதிலிருந்து இவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இருவருமே பாலிவுட்டிலும் கால்தடம் பதிக்க உள்ளார்கள். தற்போது இருவரும் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்கள்.





