இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தாரி உட்பட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. மேலும், இந்த படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் பட ரிலீஸ் காண வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக கவனம் செலுத்தி வருகின்றார்கள். சமீபத்தில் இந்த படத்தின் சிறப்புக் காட்சிகளை பிரபல பிரமுகர்கள் பார்த்து நல்ல விமர்சனங்களை பேட்டியில் சொல்லி இருந்தார்கள்.
நாளை இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் அடுத்தடுத்த sneak peek காட்சிகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் ராதாரவி நீதிமன்றத்தில் வாதாடும் காட்சியின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த காட்சியில் இந்த நீதிமன்றத்தில் நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் என்பதை பெருமையாக சொல்கிறேன் ஆனால் என் வீட்டில் முத்துராமலிங்கத் தேவர் ஐயா படம் இருக்கிறது.
பேரறிஞர் அண்ணாவின் படம் இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் உடைய படம் இருக்கிறது அதனால் நீங்கள் என்னை பட்டியலில் இடம் இல்லை என்று சொல்லப் போகிறீர்களா என்று பேசியிருக்கிறார். இதுஒருபுறம் இருக்க இந்த திரைப்படம் தன்னுடைய ஐடியா என்று நடிகரும் இயக்குருமான ஆறு பாலா மோகனுடன் பேசிய உரையாடலின் ஆடியோ ஒன்று லீக் ஆகி சமூக வளைத்ததில் பெரும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசியுள்ள ஆறு பாலா, ஆறு பாலா அவர்கள் மோகன் ஜி அவர்களிடம் தான் எடுக்கும் படத்தின் கதையை பற்றி சொல்லியிருக்கிறார். மோகனும் சரி சொல்லி விட்டு ஆறுபாலா இயக்கம் கதையோட PCR கான்செப்ட்டை அவர் தன்னுடைய ருத்ர தாண்டவம் படத்தில் வைத்து இருப்பதால் ஆறு பாலா அவர்கள் இயக்குனர் மோகனுக்கு கால் செய்து பேசி இருக்கிறார்.