தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருந்த படம் கேர்ள்பிரண்ட். ஆண் சிந்தனை நிறைந்த உலகத்தில் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணினுடைய போராட்டத்தை மையமாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகாவின் காதல் கிசுகிசுகள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா அவர்கள் ஐந்து வருடத்திற்கும் மேலாக தன்னுடன் நடித்த விஜய் தேவர் கொண்டாவை தான் காதலிக்கிறார், டேட்டிங் செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது.
ராஷ்மிகா காதல் கிசுகிசு:
அதற்கு ஏற்ப இருவருமே பல இடங்களில் ஒன்றாக சென்ற புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. அதோடு சில மேடைகளில் கூட விஜய் தேவர் கொண்டாவை காதலிப்பதாக மறைமுகமாக ராஷ்மிகா உறுதி செய்திருந்தார். இதை அடுத்து கடந்த மாதம் தான் ராஷ்மிகா-விஜய் தேவர்கொண்டா உடைய நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்ததாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்து இருவருமே எந்த ஒரு தகவலுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=nF5D3RTr-7M
ராஷ்மிகா - விஜய் தேவர்கொண்டா திருமணம்:
இதை அடுத்து ராஷ்மிகா - விஜய் தேவர்கொண்டா திருமணம் பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தானில் தான் நடைபெறுகிறது. இதில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் இருவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

ராஷ்மிகா சொன்னது:
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவுமே வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் பேட்டியில் ராஷ்மிகாவிடம் திருமணத்திற்கு வாழ்த்து கூறி பேசியிருக்கிறார்கள். அப்போது ராஷ்மிகா சிரித்துக் கொண்டே நன்றி என்று கூறுகிறார். இதன் மூலம் இவருக்கு திருமணம் நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது. இருந்தாலும் இருவரும் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.






