சர்ச்சையான பேச்சு, திட்டி தீர்த்த ராஷ்மிகா ரசிகர்கள், விளக்கம் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் – ரஷ்மிகாவின் Reply இது தான்.

0
2303
rashmika
- Advertisement -

புஷ்பா படத்தின் தான் நடித்த ஸ்ரீவள்ளி கதாபத்திரம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதுகுறித்து முதன் முறையாக பதில் அளித்துள்ளார் ராஷ்மிகா. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீப காலமாக இவர் பெண் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருந்த படம் “டிரைவர் ஜமுனா”. வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் 18 ரீல்ஸ் நிறுவனத்தின் எஸ்பி சௌத்ரி இந்த படத்தை தயாரித்திருந்தார்.

- Advertisement -

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்த “ரன் பேபி ரன்” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஆனால், அது ஒரு சிறிய கதாபாத்திரம் தான். அதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த “சொப்பன சுந்தரி” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இந்நிலையில் ஃபர்ஹானா திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய பேட்டிகள் கொடுத்திருந்தார். அப்படி தெலுங்கில் ஒரு பேட்டியில் ‘நான் ஒரு நல்ல தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன்.நான் நடித்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படம் பெரியளவு வெற்றியை கொடுக்கவில்லை. எனக்கு தெலுங்கு சினிமா ரொம்ப பிடிக்கும். மேலும், புஷ்பா படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சயம் நான் நடித்திருப்பேன். அந்த படத்தில் இடம் பெற்ற ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா ரொம்ப அருமையாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அந்த கதாபாத்திரம் ராஷ்மிகாவை விட எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ராஷ்மிகாவின் ரசிகர்கள் பலர் ஐஸ்வர்யா ராஜேஷை கேலி செய்ய துவங்கிவிட்டனர்.இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் ‘சமீபத்தில் ஒரு பேட்டியின் போது, என்னிடம் சினிமாவில் நான் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேட்கப்பட்டது.

அதற்கு, எனக்கு தெலுங்கு சினிமா ரொம்ப பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிப்பேன். உதாரணமாக புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தேன். ஆனால் என்னுடைய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ்ஷின் இந்த விளக்கத்தை கண்ட பின்னர் பதிவு ஒன்றே போட்டிருக்கும் ராஷ்மிகா வந்தனா ‘ இப்போது தான் இதை பார்த்தேன். நான் நீங்கள் சொன்னதை முழுமையாக புரிந்துகொண்டேன். நான் உங்கள் மீது அன்பும் மரியாதையையும் மட்டும் தான் வைத்து இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எனவே, நம்மை பற்றி விளக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. உங்கள் பர்ஹான திரைப்படத்திற்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement