கோகுலுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததற்கான காரணம் குறித்து கலா மாஸ்டர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் கோகுலும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் mime கலைஞராக இருந்தார். இவரது திறமையை பார்த்து கலா மாஸ்டர் தான் இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சியில் வாய்ப்பு கொடுத்தார்.
அந்த நிகழ்ச்சியில் இவர் நடனத்தைவிட பல வித்யாசமாக வித்தைகளை காட்டி பலரையும் வியக்க வைத்தார். இவர் நடனம், ஜிம்னாஸ்ட்டிக், பிட்னஸ், மேஜிக், போர்ட் பேலன்ஸிங் என்று பல வித்தைகளை கற்றுத் தேர்ந்தவர். ‘அம்புலி’ படத்தில் மிருகமாக நடித்ததும் கோகுல் தான். இந்த தகவல் படம் வெளியாகி சில காலம் கழித்து தான் பலருக்கும் தெரிந்தது. அம்புலி படத்திற்கு பின்னர் இவர் மகளீர் மட்டும், ஜம்புலிங்கம் 3டி, ஐரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மானாட மயிலாட நிகழ்ச்சியில் பலரும் நடனம் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் போது இவர் மட்டும் படு வித்யாசமான பல்வேறு திறமைகளை காட்டினார். மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியிலும், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். நடனம் மட்டும் அல்லாது பல்வேறு திறமைகளை கொண்டவர் கோகுல். அதே போல இவர் தான் தமிழ் பிக் பாஸின் குரலுக்கு சொந்தக்காரர் என்று பலர் நினைத்ததுண்டு. ஆனால், அது கோகுல் கிடையாது.
தற்போது கோகுல் ‘Guta’ என்ற டேலண்ட் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் சிறுவர்களின் தனி திறமைகளை கொண்டு வந்து அவர்களை அதில் சிறப்பானவர்களாக ஆக்க வைக்கிறார் கோகுல். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் 4 கின்னஸ் சாதனைகளை செய்துள்ளார். அதோடு இவர் பல முறை கின்னஸ் சாதனை செய்து இருக்கிறார். ஆனால், அது வெளியில் பரவலாக தெரியவில்லை.
கலா மாஸ்டர் பேட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் கலா மாஸ்டர் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் சாண்டி- கோகுல் குறித்து கேட்டிருந்தார்கள். அதற்கு கலா மாஸ்டர், சாண்டிக்கு நேரம் நன்றாக இருக்கிறது. அதனால் அவருடைய கேரியர் செட்டில் ஆகிவிட்டது. ஆனால், கோகுலுக்கு நேரம் அமையவில்லை. அவன் ரொம்ப திறமையானவன். பொதுவாக அவன் யாரிடமும் வெளிப்படையாக பேச மாட்டான். அமைதியாக இருப்பான்.
கோகுல் குறித்து சொன்னது:
மானாட மயிலாட செட்டில் கூட அவன் அமைதியாக இருப்பான். ஆனால், அவன் நடனம் ஆடி முடித்த பிறகு பலருமே வாயை பிளந்து விடுவார்கள். அந்த அளவிற்கு சூப்பராக ஆடுவான். இந்த பூனையும் பால் குடிக்குமா! என்ற பாணியில் இருப்பான். அதோடு அவன் பள்ளி மாணவர்கள் எல்லாம் வைத்து நிறைய பயிற்சி மேற்கொண்டு வருகிறான். அந்த வகையில் அவன் 52 கின்னஸ் ரெக்கார்டு வாங்கி இருக்கிறான். இது பலருக்குமே தெரியாது. அவனுடைய திறமை வெளியில் வரவேண்டும். கண்டிப்பாக ஒருநாள் வரும். அவனுக்கு அந்த நேரம் அமையும் என்று கூறியிருக்கிறார்.