கழிவுநீர் சாக்கடை தொடர்பாக தமிழக அரசை கண்டித்து பா ரஞ்சித் பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாகவே தமிழ்நாட்டில் கழிவு நீர் தொட்டிக்குள் சிக்கி விசவாயு தாக்கி பல பணியாளர்கள் மரணமடைந்திருக்கின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திருக்கிறது. கடந்த 1ம் தேதி திருவள்ளூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் மயக்கம் அடைந்து உயிர் இழந்து விட்டனர்.
அதனை அடுத்து ஐந்தாம் தேதி திண்டிவனத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்றிருந்தபோது மேற்கு வங்காளத்தை சேர்ந்த சிராஜ் என்பவர் சாக்கடைக்கு வெட்டப்பட்ட கால்வாயின் கரை திடீரென சரிந்து விழுந்ததில் சிக்கி இறந்துவிட்டார். இப்படி தொடர்ந்து கழிவுநீர் தொட்டிக்குள் பணியாளர்கள் இறந்து வரும் சம்பவம் சோசியல் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்து டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.
ரஞ்சித் டீவ்ட்:
அதில் அவர், தொடரும் மலக்குழி மரணங்கள்! தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம்! இக்கொடுமையான சமூக அவலத்தை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்கும் கடும் கண்டனங்கள். மலக்குழி மரணங்களை குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்சனையாக மட்டும் கருதி கடந்து போகாமல் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் அவலமாக கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுத்திட முனைவோம்! தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு” என்று கடுமையான கண்டனம் தெரிவித்து கூறி இருக்கிறார்.
இதை பற்றி உங்கள் கருத்து pic.twitter.com/YbCI70srp6
— மாணிக்கம் (@G38845127G) May 18, 2023
பா ரஞ்சித் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார்.
ரஞ்சித் இயக்கிய படங்கள்:
இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
விக்ரம்-ரஞ்சித் கூட்டணி:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தற்போது விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் கதையாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.