அந்த கதையை நான் தான் பாக்கியராஜுக்கு சொன்னேன் – 30 ஆண்டு கழித்து ராசுக்குட்டி பட நடிகர் அளித்த பேட்டி.

0
1739
sembulli
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்த வகையில் இவரின் வெற்றி திரைப்படங்களில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான “ராசுகுட்டி” திரைப்படமும் ஓன்று.

-விளம்பரம்-

இத்திரைப்படத்தில் கதை, இயக்கம், நடிகர் என பல விதமாக பாக்யராஜ் பணியாற்றியிருந்தார். மேலும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா, மானோரம்மா, கல்யாண் குமார் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படமானது அப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்படத்தினை ரீகிரியேஷான் செய்து சமீபத்தில் இயக்குனர் பாக்யராஜ் தன்னுடய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகனான பாக்யராஜுக்கு குடை பிடிபித்தவாறு சுற்றி திரிந்த நடிகர் தான் இயக்குனர் செம்புலி ஜெகன். இந்நிலையில் இப்படத்தின் ரீமேக்கிற்கு பிறகு செம்புலி ஜெகன் பிரபல செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் இயக்குனர் பாக்கியராஜுடன் இணைந்து நடித்த அனுபவத்தை கூறியிருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது தொடக்கத்தில் நான் பாக்யராஜுடைய துணை இயக்குனராக பணியாற்ற 3 வருடங்கள் நான் அவரது வீட்டி வாசலிலேயே இருந்தேன். ஏனென்றால் அப்போது அவர் மிகவும் பிரபலமான இருந்தார் அவரை பலர் தொடர்ந்து சாதித்து கொண்டே இருந்தனர்.

அதனால் அவரை எளிதில் சந்திக்க முடியாது. ஆனால் அதற்க்கு பிறகு தொடர்ந்து முயற்சி செய்து பாக்யராஜிடம் துணை இயக்குனராக சேர்ந்தேன், அவருடன் பல இயக்குனர்கள் இருக்கின்றனர். ஆனால் அதில் முதன்மையாக நான்தான் அணைத்து வேலைகளையும் இப்போது வரையிலும் செய்து வருகிறேன். ஆராரோ அரிராரோ திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமாகினேன் மேலும் அப்படத்தின் நானும் நடித்திருக்கிறேன். அதற்கு பிறகு “சுந்திரகாண்டம்” என்ற படத்தில் நான் துணை இயக்குனரானேன். அப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்த்து 150 நாட்கள் ஓடியது.

-விளம்பரம்-

இதற்கு பிறகு நான் தனியாக படம் எடுக்கலாம் என்று முடிவெடுத்ததாக இயக்குனர் பாக்யராஜிடன் கூறினேன். ஆனால் அதற்கு பாக்யராஜ் ஒத்துக்கொள்ளாமல் என்னை மற்றொரு திரைப்படம் எடுப்பதற்கு பம்பாய்க்கு அழைத்து சென்று விட்டார். இந்நிலையில் அதற்க்கு பிறகு நான் ஒரு கதையா கூறினேன். அவரும் அந்த கதை நன்றாக இருக்கிறது என்று கதையா முழுமையாக்க நாங்கள் அவருடைய ஈரோடு பக்கத்தில் இருக்கும் தோப்பிற்கு சென்றிருந்தோம்.

அங்கு நண்பர்களுடன் கலந்துரையாடும் போது என்னை அவருக்கு உதவியாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அந்த திரைப்படம் தான் “ராசுகுட்டி”. இப்படம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெற்றது. அதோடு இயக்குனர் பாரதிராஜா கூட என்னை பாராட்டினார். அதோடு பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சம் கூட என்னை அழைத்து வெகு நேரம் பேசினார் என்று பல சுவாரசியமான தகவல்களை இயக்குனர் மற்றும் நடிகராகிய செம்புலி ஜெகன் கூறியிருந்தார்.

Advertisement