சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபாலன் என்ற அந்த ஆசிரியர், மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.
23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில் இந்த சர்ச்சை சமூக வலைதளத்தில் வெடிக்க ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் பாருங்க : உங்க பையன கோடம்பாக்கம் ரோட்டுக்கு கூட்டி போய் – தனது பள்ளியில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து ஏ ஆர் ரஹ்மானின் முந்திய வீடியோ.
அவர் மீது போஸ்க்கோ உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதே போல மாணவிகளுக்கு ஆபாசமாக நடந்துகொண்டது உண்மை தான் என்றும் ராஜகோபாலன் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தவுடன் ஆசிரியர் ராஜ கோபாலனை ராட்சசன் பட இன்பராஜுடன் பலரும் ஒப்பிட்டு வருகின்றார்கள். அந்த படத்தில் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுக்கும் ஆசிரியர் இன்பராஜ் எனும் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ஒருவர், இன்னிக்கு முழுக்க ஏதேதோ வேலைல இருந்தாலும் இந்த PSBB school விவகாரம், அந்த ராஜகோபலனின் கீழ்மையும்தான் ஓடிட்டே இருந்துச்சு. ராட்சசன் படம் வந்தப்ப, மாணவிகளின் பெற்றோர் எவ்வளவு பயப்படுவாங்க இதெல்லாம் தவறான படம்னு வாதம் செய்தேன். மிகக்கடுமையான தண்டனை என்பது முதல் தேவை அடுத்து, எப்படி, என்ன செய்தால் இவற்றை தடுக்கலாம் என்ற ஆய்வும் முன்னெடுப்பும் மிக அவசியம் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு குறித்து கமன்ட் செய்துள்ள, ராட்சசன் பட இயக்குனர் ரத்னகுமார், ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.