தேர்தல் வேட்பு மனுவில் நடிகை ரவீனா பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடைபெறுவது வழக்கமான ஒன்று தான். இந்த சங்கத்தில் 2000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆகஸ்ட் 10ஆம் தேதி தான் இந்த நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகிறது. தலைவர் பதவியில் இருக்கும் சிவன் சீனிவாசன் தான் தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

மீண்டும் அவருடைய தலைமையிலான அணி தான் போட்டியிடுகிறது. அவரை தவிர பரத் தலைமையில் ஒரு அணி, தினேஷ் தலைமையில் ஒரு அணி என மூன்று அணிகள் இந்த முறை போட்டியிட இருக்கிறார்கள். நடிகை ஆர்த்தி கணேஷ் மட்டும் சுயேச்சையாக தலைவர் பதவிக்கும் அவருடைய கணவர் கணேஷ் அவர்கள் சுயேச்சையாக துணை தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.
நடிகர் சங்க தேர்தல்:
சிவன் அணியை சேர்ந்தவரும் சங்கத்தினுடைய செயலாளருமான போஸ் வெங்கட் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக சொல்லப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் தேர்தலில் இருந்து விலகி விட்டார். தற்போது அவருக்கு பதில் நிரோஷா செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். கடந்த திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. பின் இந்த வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டது. இதில் தினேஷ் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை ரவீனா போட்டியிட மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தார்.

ரவீனா மனு கேன்சல்:
இந்த நிலையில் இவருடைய மனு நிராகரிக்கப்பட்ட தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகை ரவீனா மீது நடிகர் சங்கத்திலிருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட செய்தி பரவி இருந்தது அனைவரும் அறிந்ததே. காரணம், சில மாதங்களுக்கு முன்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி தொடரில் நடிக்க கமிட் ஆகி ப்ரோமோ சூட்டெல்லாம் நடித்து இருந்தார். அதன் பின்பு இவர் நடிக்க மறுத்திருக்கிறார். இது தொடர்பாக சீரியல் குழுவினர் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்கள்.

ரவீனா சர்ச்சை:
அதற்கு பின் ஓராண்டுக்கு சீரியலில் நடிக்க ரவீனாவிற்கு தடைபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கூட ரவீனா, சீரியலில் இரண்டு ஹீரோயினிகள் சப்ஜெக்ட் என்று என தெரியாது. நடிக்கப் போன பிறகுதான் இரண்டு ஹீரோயின் என்று தெரிந்தது. அதனால்தான் முடியாது என சொல்லிவிட்டேன் என்று கூறியிருந்தார். இருந்தாலும் ரவீனா செய்தது தவறு என்று ரெட் கார்டு கொடுத்திருந்தார்கள். தற்போது இந்த காரணத்தை சொல்லி தான் அவருடைய மனுவும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

மனு தள்ளுபடி செய்ய காரணம்:
ரவீனா தண்டனையில் இருக்கும் போது சின்னத்திரை செயற்குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டு ரவீனாவிற்கு வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கோடு இருக்கிறார்கள். அதோடு சங்கத்தின் பை லாவிலும் செயற்குழுவின் நடவடிக்கைக்கு ஆளானவர்கள் சின்னத்திரை தொடர்பான எந்த ஒரு விஷயத்திலும் பங்கு பெற முடியாது என்று சொல்லப்பட்டிருப்பதால் ரவீனாவை இந்த தேர்தலில் இருந்து நீக்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது






