பணத்துகாக தான், 3 மாசம் தாங்குமா, சீக்கிரம் ரெண்டும் அடிச்சிட்டு வீடியோ போடும்னுலாம் சொன்னாங்க – முதல் திருமண நாளில் ரவீந்தர் போட்ட பதிவு.

0
951
Ravindar
- Advertisement -

சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக சென்று இருந்தது பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன்- நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் தான். தயாரிப்பாளரான ரவீந்தர் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்துகொண்டது தான் ரசிகர்கள் மத்தியில் ஒரு மாதத்திற்கு மேல் பேசப்பட்டு வந்த விஷயம். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கணவரை பிரிந்த நிலையில் பல ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் ரவீந்தரை திடீர் திருமணம் செய்தார். ஆனால், திருமணத்திற்கு பின்னர் தான் தானும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்ற உண்மையை ரசிகர்களுக்கு சொன்னார் ரவீந்தர்.

-விளம்பரம்-

இவர்கள் திருமணம் முடிந்த போது பலர் பேர் வாழ்த்து சொன்ன அதே அளவு பல பேர் மஹாலக்ஷ்மியின் கேரக்டரை விமர்சித்ததோடு இவர்களின் ஜோடியையும் கேலி செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கூட செய்திகள் பரவியது. இப்படி பல பிரச்சனைகளை தாண்டி இன்று முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டமும் ரவீந்தர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

- Advertisement -

அதில் ‘எப்படி ஆரம்பிக்கிறது, எப்டி சொல்றது, ஒரு வருஷம் அப்படிங்கிறதுக்குள்ள சீக்கிரம் போய்டுச்சி. அது எப்படி உங்களலாத்தான். போன வருஷம் இந்த நாட்டின் மிகப்பெரிய பிரதான பிரச்னை எங்க கல்யாணம். போற இடமெல்லாம் ஆச்சிரியமா பார்ப்பாங்க. இது எப்டி சாத்தியமானது என தெரியல, நிச்சயம் பணத்துகாக தான், 3 மாசம் தாங்குமா, பாப்போம் இது எவ்ளோ நாளைக்கு , சீக்கிரம் ரெண்டு அடிச்சிகிட்டு வீடியோ பேட்டி கொடுக்கும் பாருங்க..உஷ்ஷ்ஷ், போதும் முடியல. அப்படி நம்ம ஆசை பட்டு அதுக்கு உண்மையா இருக்குற வாழ்க்கை எனக்கு வரம்.

எனக்கும் நிறை தோன்னுச்சு இவ பயங்கரா Attitude போல, கோலம் போட்றது , காபி அல்லது சமையல் அப்றம் வீட்டு வேலை எல்லாமே வேலக்காரங்க தான் வைக்க வேண்டும் போல நெனச்சேன்.தக்காளி சீரியல் பொண்ணு சீரிஸ்ஸா செய்துபா. அதிகாலை கெட் அப், சுத்தி சுத்தி கோலம், சூப்பரான காபி கொஞ்சம் கண்ராவியனா சமையல், நல்லா இருக்கு பாப்போம், 3 மாசத்துக்கு அப்புறம் ஸ்விக்கியா அல்லது டன்ஸூவானு நெனச்சேன் பாப்பா கலக்கிட்டாபா.

-விளம்பரம்-

இது நம்ம டிவில பார்க்கிற சீன்லாம் இல்ல, அதுக்காக திமிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஆனால் லவ் சும்மா உங்க வீடு அல்லது எங்க வீட்டு இல்லை, முரட்டு லவ் பண்றா. என்ன இவளுக்கு என்மேல ரொம்ப லவ் வந்துச்சுனா ஓடனே காமிச்சே தீரனும்னு சமைக்க போய்டுவா. அப்போதா எனக்கு என் இன்சூரன்ஸ் பாலிசி நியாபகம் வரும். போனா வாரம் தான் பீன்ஸ் சைய்ய அறமைச்சா தேவுடா. நாங்க பிரிஞ்சிட்டோம் அப்றம் நாங்க சோகத்தில் வாழ்றோம்னு 11 மாசம் யூடியூப்ல எங்க வெச்சி போகும் போதெல்லாம் அம்மு நம்ம வாழ்ந்து காட்டணும் அம்முனு சொல்லிட்டு பைத்தியமா இன்னும் லவ் பண்ணுவா.

அப்போ யூடியூப் மேலா வரும் பாருங்க ஒரு கோவம். நிருத்து, உன்மேல உனக்கு அதிகமா அன்பு காட்னா கோவம் வேற வருமோனு கேட்கலாம். யோவ், அவ அந்த ரஜினி சார் படத்துல வர ராதிகா மேம் மாதிரி நடுராத்திரி இட்லி சுட்டு மாமா சாப்பிட்டுனு 3 மணிக்கு சொல்லுவாங்களே அதே மாதிரி தான். வீக் எண்ட் ஆனா ஹோட்டல், அதுலயும் அவங்க கொண்டு வர எதுவும் நல்லா இல்ல ஆனா செட்டப் மற்றும் செய்முறைல ஒரு முதல் வாய் சாப்டு யம்மி அம்முன்னு சொல்லுவா பாருங்க, அப்போ என் முஞ்சி. சரி விடுங்க.

இப்படி பூரா ஒரு பக்கம் அவளோட உண்மையான நேர்மையான அன்பு, அதுக்கு நான் தகுதியானவனான்னு எனக்கு தெரியல. நம்ம வாழ்க்கை எவ்வளவு அழகுன்னு நம்மள சந்தோஷமா சிரிக்க வச்சு பார்க்கிற பொண்ண விட சந்தோஷத்துல அழ வைக்கிற பொண்ணு தான் நமக்கு அழகான வாழ்க்கை தர முடியும். லவ் யூ பங்காரம். நல்ல மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் – என் மனைவி. நல்ல கனவன் அமைவது இறைவன் வளர்த்த விதம் – என் அம்மா’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement