பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மற்றொரு போட்டியாளர் வெளியேற வாய்ப்புள்ள தகவல்தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்து தான். விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி இன்று இரண்டாவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் எல்லோருமே குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார்கள்.
பிக் பாஸ் சீசன் 8:
கடைசியில் ஆண்கள், பெண்கள் கேட்ட பக்கம் விட்டுக் கொடுத்தார்கள். இருந்தாலும், ஒரு வாரம் எந்த ஆண்களையும் எலிமினேஷன் செய்யக்கூடாது என்று கண்டிசன் போட, பெண்கள் அணி ஏற்று கொண்டார்கள். ஆனால், ஜாக்லினுக்கு இதில் உடன்பாடு இல்லை. இப்படி முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்கும், சலசலப்பும் தொடங்கிவிட்டது. பின் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தது. இது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:
மேலும், ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒவ்வொருவரின் பெயரை நாமினேட் செய்திருந்தார்கள். அந்த வகையில் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதன் பின் முதல் வரத்திற்கான கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. இதில் தர்ஷிகா வெற்றி பெற்று இந்த வார தலைவராகி இருக்கிறார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின், ரவீந்தர், சௌந்தர்யா, முத்து, ரஞ்சித், அருண் ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
கேப்டன் போட்டி:
இதனிடையே நேற்று கேப்டன் தேர்வெடுப்பதற்கான போட்டி நடத்தப்பட்டது. அதில் எதிர் எதிர் திசையில் நாற்காலிகள் போடப்பட்டு, ஒருபுறம் ஆண்களும் மறுப்புறம் பெண்களும் அமர வைக்கப்பட்டு, அதில் யார் இடத்தை பிடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு செல்வார்கள். அப்படி நற்காலியில் இடம் பிடிக்க முடியாதவர்கள் வெளியேற வேண்டும். இந்த விளையாட்டில் முதல் ஆளாக ரவீந்தர்தான் வெளியேறினார். தயாரிப்பாளர் ரவீந்தரால் விரைவில் ஓட முடியவில்லை.
https://www.youtube.com/watch?v=5oMUR9cgGdI
காயமடைந்த ரவீந்தர்:
இருந்தாலும் அவர் முயற்சி அதற்கு சகப் போட்டியாளர்களும் கைதட்டி பாராட்டி இருந்தார்கள். அந்த போட்டியில் ரவீந்தர் ஓடி இருந்தது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்து வருகிறார். அவருக்கு நேற்று இரவு மருத்துவ உதவியும் செய்யப்பட்டது. ரவீந்தரை சகப் போட்டியாளர்கள் தான் கைத்தாங்களாக நடக்க உதவுகிறார்கள். ஒருவேளை அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






