’விஷால் பிரச்சனை பிஸ்கோத்து மேட்டர்’ – விஷாலின் பத்திர புகாருக்கு தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி கூல் பதில்.

0
2473
vishal
- Advertisement -

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌவுத்ரி மீது நடிகர் விஷால் தி.நகர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி விளக்கமளித்துள்ளார். ‘இரும்புத்திரை’ படத்துக்காக பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரியிடம் ஃபைனான்ஸ் வாங்கியிருக்கிறார் நடிகர் விஷால். இந்த கடனுக்கு உத்தரவாதமாக வீட்டுப்பத்திரங்கள் உள்பட சில ஆவணங்களை கொடுத்திருக்கிறார்.இப்படி ஒரு நிலையில் கடனை திருப்பிக்கொடுத்ததாகவும். ஆனால், ஆர் வி சௌத்ரி ஆவணங்களை திருப்பி தராமல் இருக்கிறார் என்று விஷால் புகார் தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-

இதுதொடர்பாக  தியாகராய நகர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார் விஷால். இப்படி ஒரு நிலையில் ஆர் பி சௌத்ரி இதுகுறித்து குறியுளதாவது, ‘’கொச்சைத்தமிழில் சொல்லனும்னா இது ஒரு பிஸ்கோத்து மேட்டர். ‘இரும்புத்திரை’ படத்துக்காக என்னிடமும் திருப்பூர் சுப்ரமணியத்திடமும் நடிகர் விஷால் ஃபைனான்ஸ் வாங்கியிருந்தார். அதற்கு உத்திரவாதமாக டாக்குமென்ட்ஸ் சிலவற்றை கொடுத்திருந்தார்.

- Advertisement -

ஆனால், திருப்பூர் சுப்ரமணியத்தின் கொடுக்கல் வாங்கல் எல்லாம் ஆயுத பூஜை படத்தை இயக்கிய இயக்குனர் சிவகுமார் என்பவர் தான் பார்த்து வந்தார். அதனால் அவரிடம் தான் திருப்பூர் சுப்ரமணியம் எல்லா பாத்திரங்களையும் கொடுத்து வைத்து இருந்தார். இந்த நிலையில் திடீரென சிவகுமார் இறந்துவிட்டார். அதனால் அவரிடம் இருந்த விஷால் தொடர்பான ஆவணங்கள் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

RB Choudary against Actor Jeeva | Not interested in producing jeeva Film -  YouTube

இருப்பினும் விஷால் எங்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டதால் எங்களுக்கும் விஷாலுக்கும் எந்த நோயும் இல்லை என்று கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே ஆனாலும் விஷால் நம்ப மறுக்கிறார் நாளை அந்த ஆவணங்களை வைத்து ஏதாவது பிரச்சினை செய்துவிடுவோம் என்று நினைக்கிறார் உண்மையிலேயே அந்த ஆவணங்கள் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement