இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்த மனைவி, திருநம்பியாக திரும்பினார் – திட்டம் இரண்டு பட பாணியில் ஒரு உண்மை சம்பவம்.

0
5920
tittam
- Advertisement -

பொதுவாக சினிமாவில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடந்து விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திட்டம் 2 படத்தில் நடைபெற்றது போலவே ஒரு சம்பவம் நிஜ வாழ்க்கையிலும் நடைபெற்று இருக்கிறது. பகல் நிலவு சீரியல் நடிகர் கார்த்தி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் தன் நெருங்கிய தோழிக்காக அவளுக்கே தெரியாமல் ஆணாக மாறி பின் அவளையே காதலிப்பார். இறுதியில் தன்னை காதலித்தது தன்னுடைய நெருங்கிய தோழி தான் என்ற உண்மை தெரிய வந்ததும் தனக்காக ஆணாகவே மாறிய அவரின் காதலை ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்றாரா? இல்லையா? என்பதை சொல்லாமலேயே இந்த படத்தின் கதையை முடித்து இருப்பார் இயக்குனர்.

-விளம்பரம்-
பெற்ற குழந்தையை கைவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் கதையைப் போலவே தன்னுடைய பெண் தோழி மீதான காதலால் கணவர் மற்றும் குழந்தையை கைவிட்டு இருக்கிறார் ஒரு இளம் பெண். மதுரையை சேர்ந்த சரவணனுக்கும் ஜெயஸ்ரீக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின் சில மாதங்களில் ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்கவில்லை. இது குறித்து ஜெயஸ்ரீ குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். பல மாதங்களாகியும் ஜெயஸ்ரீயை கண்டுபிடிக்க முடியவில்லை. பின் போலீஸ் தேடுதலில் ஜெயஸ்ரீ சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாக தெரியவந்தது.

இதையும் பாருங்க : அவன் அந்த பொண்ண சின்சியராதா லவ் பண்ணான், ஆனா அந்த பொண்ணு இப்படி பண்ணிடிச்சி – கலங்கிய விஷால் தந்தை

- Advertisement -

பின்னர் அவரை பிடித்து போலீஸ் விசாரித்தபோது அவர் தன்னுடைய பள்ளித் தோழியான துர்கா தேவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதாக தெரிய வந்துஉள்ளது.மேலும், மதுரை தனியார் பள்ளி ஒன்றில் படித்து கொண்டு இருக்கும் போதே ஜெயஸ்ரீ,துர்காதேவி நெருங்கி பழகியுள்ளார்கள். பின்னர் இவர்கள் இருவரும் காதலன் காதலி ஆகவே இருந்துள்ளனர். பள்ளிப்படிப்பு முடிந்த பின்பும் இவர்களுடைய பழக்கம் நீடித்தது. இந்த விஷயம் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததும் ஜெயஸ்ரீக்கு திருமணம் செய்து உள்ளார்கள். ஆனால், திருமணத்திற்கு பிறகும் ஜெயஸ்ரீயால் துர்காதேவியை மறக்க முடியாமல் தவித்து வந்தார். ஜெயஸ்ரீ கர்ப்பிணியாக இருந்ததால் தன் தோழியை தேடி செல்ல முடியாமல் இருந்தார்.

பின் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே குழந்தையை வீட்டில் விட்டு விட்டு துர்காவை பார்க்க சென்னைக்கு சென்று விட்டார். மேலும், ஜெயஸ்ரீ தன் தோழி துர்கா தேவிக்காக தன்னுடைய சிகை அலங்காரத்தையும் உடையும் ஆண் போல் மாற்றி அவர்கள் இருவரும் ஒன்றாக தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது இவர்கள் இருவரையும் போலீசார் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளது. அப்போது கோர்ட்டில் ஜெயஸ்ரீ தனது தோழியுடன் வசிக்க விரும்புகிறேன் என்றும், கணவர், குழந்தை, பெற்றோருடன் செல்ல தனக்கு விருப்பம் இல்லை என்றும், என்னை கட்டாயப் படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார். பிறகு கோர்ட் ஜெயஸ்ரீ மேஜர் என்பதால் அவருடைய விருப்பப்படியே செல்லலாம் என்று அறிவித்தது. இதனையடுத்து ஜெயஸ்ரீ தன் தோழியுடன் சென்று விட்டார். இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement