அட, டோரா முதல் அனபெல்லா வரை பல கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் செய்த இவர் தான் டெடிகும் டப்பிங் கொடுத்தவர்.

0
1116
teddy
- Advertisement -

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான டெட்டி திரைப்படத்தில் டெட்டியாக நடித்தவரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மீகாமன், காப்பான் போன்ற படங்களை தொடர்ந்து ஆர்யா நடித்த இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி இருந்தார். இவர் தமிழில் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் ‘டெட்டி’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

-விளம்பரம்-

அதிபுத்திசாலி இளைஞரான ஆர்யா, எந்த ஒரு வேலையையும் நேர்த்தியாக செய்யக்கூடிய குணம் கொண்டவர். மறுபுறம் கல்லூரி மாணவியான சாயீஷா, ஒரு விபத்தில் சிக்குகிறார். அப்போது அவருக்கு லேசாக காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அங்கு ஒரு கும்பல் செய்யும் சதிச் செயலால் சாயிஷா கோமா நிலைக்கு செல்கிறார். அவரை கடத்திச் செல்கின்றனர். கோமா நிலைக்கு செல்லும் போது அருகில் இருக்கும் டெடி பியர் பொம்மையை சாயீஷா கெட்டியாக பிடித்துக் கொள்கிறார்.

- Advertisement -

அப்போது அவரின் ஆத்மா அந்த டெடி பியருக்குள் புகுந்துவிடுகிறது. இதையடுத்து உயிர்பெறும் அந்த டெடி பியர், ஆர்யாவை சந்தித்து தன் நிலையை எடுத்து சொல்கிறது. ஆர்யாவும் அதற்கு உதவ முன்வருகிறார். இறுதியில் ஆர்யாவும் டெடியும் சேர்ந்து சாயீஷாவை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. இந்த திரைப்படம் பெரியவர்களை விட குழந்தைகளை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தில் டெட்டியாக நடித்த நபரின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. இப்படி ஒரு நிலையில் டெட்டிக்கு குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் நிம்மியாம். இவர் டோரா, அனபெல்லா, பவர் பப் கேர்ள்ஸ் என்று பல்வேறு கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளாராம். இதோ அவரின் பேட்டி.

-விளம்பரம்-
Advertisement