எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினால் தமிழ் சினிமாவில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும், அஜித் என்றாலே நேர்மையான மனிதன், அன்பானவர், நல்ல குணம் கொண்டவர் என்று பிரபலங்கள் பலராலும் பாராட்டப்பட்டவர்.
இருந்தாலும் அஜித்திற்கும் வடிவேலுக்கும் எப்போதுமே ஒரு சர்ச்சை இருந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமா வட்டாரத்தில் கூட இவர்கள் சண்டை குறித்து பேசியிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே கடைசியாக 2002 ஆம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் தான் நடித்திருந்தனர். அந்தப் படத்தின் போது இருவருக்கும் சண்டை நடந்திருக்கிறது. அதனால் தான் இருவரும் ஒன்றாகவே அந்த படத்தில் நடிக்கவில்லை. தனித்தனி காட்சிகளில் நடித்திருப்பார்கள்.
அஜித் வடிவேலு சேர்ந்து நடித்த படம்:
ராஜா படத்தில் அஜித்திற்கு மாமாவாக வடிவேலு நடித்திருப்பார். அதனால் படம் முழுவதுமே அவர் அஜித்தை வாடா போடா என்று கூப்பிட்டு இருப்பார். படபிடிப்பு முடிந்தும் வடிவேலு அஜித்தை வாடா போடா என்றும், அஜித் என்று பெயர் சொல்லியே அழைத்திருந்தார். இது அஜித்திற்கு பிடிக்கவில்லை. இதை அவர் இயக்குனரிடமும் கூறியிருந்தார். இந்த விஷயத்தை இயக்குனரும் வடிவேல் இடம் சொல்லி இருக்கிறார். ஆனால், அதை வடிவேலு கண்டுகொள்ளவில்லை.
அஜித்-வடிவேலு சண்டை:
வழக்கம் போலவே அவர் அஜித்தை வாடா போடா என்று கூறியிருந்தார். இதனால் சூட்டிங் முடியும் வரையுமே அஜித் வடிவேலுடன் சரியாக பேசவில்லை. அதற்குப் பிறகு வடிவேலுடன் இணைந்து படம் பண்ண வாய்ப்பு வந்தபோதும் அஜித் முடியாது என்று மறுத்து விட்டார். இப்படி 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருவருமே இணைந்து பணியாற்றவில்லை என்று பிரபலங்கள் சிலர் பேட்டியில் கூறியிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு விழாவில் அஜித்தும் வடிவேலுவும் நேருக்கு நேர் சந்தித்து இருந்தார்கள்.
அஜித்-வடிவேலு குறித்து இயக்குனர் சொன்னது:
அப்போது எதிர்பாராத விதமாக அஜித், வடிவேலுவை பார்த்து அண்ணே, எப்படி இருக்கீங்க? என்று கேட்டிருக்கிறார். ஆனால், வடிவேலுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நின்று விட்டார். இதை பிரபல இயக்குனர் ஒருவரை பேட்டியில் கூறியிருந்தார். ஏற்கனவே இது தொடர்பாக ராஜா படத்தின் இயக்குனர் எழில் பேட்டியில், அஜித்- வடிவேல் இருவருக்குமே என்ன சண்டை என்று தெரியவில்லை. நான் என்னுடைய படப்பிடிப்பில் தான் கவனம் செலுத்தி இருந்தேன்.
அஜித் நடித்த படம்:
சூட்டிங் முடியும் போது தான் இருவருக்கும் இடையே ஏதோ மனஸ்தாபம் என்று தெரிந்தது. ஆனால், சண்டை போடும் அளவிற்கு பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை. இதை செய்திகளில் தான் பெரிய அளவில் சர்ச்சையாகி விட்டார்கள் என்று கூறி இருந்தார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை எடுத்து தற்போது அஜித் அவர்கள் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விடாமுயற்சி படம்:
இந்த படத்தினுடைய படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் தத், ஆரவ், உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இதை அடுத்து அஜித் அவர்கள் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்கிறார். இது அஜித்தின் 63வது படமாகும். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகியிருந்தது.