அஜித் தற்போது அவரது 59 படத்தில் நடித்துவருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்தரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும், இந்த படத்தில் நஸ்ரியா நடிப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை நஸ்ரியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி படுத்தி இருந்தார். ஆனால், நேற்று படத்தில் பணி புரியும் கலைஞர்களின் விவரத்தை பட குழுவினர் அறிவித்தனர்.
இதையும் படியுங்க : அஜித் 59 படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நடிகை நஸ்ரியா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
நஸ்ரியா இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியிருந்தது. இந்த திடீர் மாற்றம் குறித்து விசாரித்தபோது, நடிகை வித்யாபாலன் பாத்திரம் உள்ளே புகுத்தப்பட்டுள்ளதால் இந்தியில் இருந்த முக்கியத்துவம் தனது கேரக்டருக்கு இருக்காது என்பதாகத் தெளிவாகப் புரிந்துகொண்டார் நஸ்ரியா.
இதனால் வித்யா பாலனுக்குக் கொடுக்கக் கூடிய அதே சம்பளத்தை தனக்கும் கொடுத்தால் மட்டுமே தன்னால் படத்தில் நடிக்கமுடியும் என்று வேலைக்கு ஆகாத ஒரு காரணத்தைச் சொல்லி விலகிக்கொண்டாராம். அதே போல நஸ்ரியா இந்த படத்தில் நடிக்கிறார் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அது கூட அவரது அட்மின் தான் பதிவிட்டார் என்ற ஒரு பேச்சும் நிலவுகிறது.