லட்சுமி சீரியலில் இருந்து நடிகர் சஞ்சீவ் விலகியதற்கான காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. சொல்லப்போனால், தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சன் டிவி இருக்கிறது. டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருப்பதற்காகவே அடிக்கடி புது புது சீரியல்களை சன் டிவி வெளியிட்டு வருகிறார்கள்.
அதோட குடும்பப் பின்னணியை கதைக்களமாக வைத்தும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் சீரியல்களே சன் டிவியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்று தான் ‘லட்சுமி’. இந்த சீரியல் கடந்த மார்ச் மாதம் தான் சன் டிவியில் துவங்கப்பட்டது. இந்த சீரியலை சாய் மருது என்பவர் இயக்கி வருகிறார். இந்த தொடரில் சஞ்சீவ் வெங்கட் கதாநாயகனாகவும், சுருதி ராஜ் கதாநாயகியாகவும் நடித்து வந்தனர்.
லட்சுமி சீரியல்:
இவர்களுடன் சேர்ந்து மீனா வெம்புரி, கீர்த்தி விஜய், மேகா மேனன், நித்யா ரவீந்திரன், செந்தில்நாதன், மகிமா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது வரை 100 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலில், திருமணம் செய்து கொண்டு தன்னுடைய மாமியார் வீட்டுக்கு வந்த பின்னரும், தன்னுடைய தங்கைகள் மற்றும் அம்மாவை நல்லபடியாக வாழவைக்க, கதாநாயகி எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது.
சஞ்சீவ் விலகல்:
இந்நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவ் வெங்கட் சில காரணங்களால் இந்த சீரியலை விட்டு வெளியேறி இருந்தார். அவர் எந்த காரணத்தால் வெளியேறி இருந்தார் என்ற தகவல் தெரியவில்லை. தற்போது சஞ்சீவுக்கு பதிலாக சீரியல் நடிகர் எஸ். எஸ் ஆர்யன் கதாநாயகனாக கமிட்டாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த மகராசி என்னும் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
சஞ்சீவ் விலக காரணம்:
மேலும், சஞ்சீவ் சீரியலில் விலகியது குறித்து பலரும் பலவிதமான காரணங்களை கூறி வருகிறார்கள். அதில், இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் தயாரிப்பு தரப்பிற்கும் இவருக்கும் நிறைய பிரச்சனைகள் வந்ததாக கூறுகிறார்கள். இந்நிலையில் இதற்கான உண்மையான காரணம் குறித்து சீரியல் தொடர்புடையவர்கள் அளித்த பேட்டியில், சின்னத்திரையில் சஞ்சீவ் ரொம்ப வருஷமாக இருக்கிறார். லட்சுமி சீரியலில் அவரும் ஸ்ருதியும் சேர்ந்து நடித்தார்கள்.
சீரியல் தரப்பில் சொன்ன விளக்கம்:
சீரியல் நல்லா தான் போய்க்கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று சஞ்சீவ் ஷூட்டிங்கிற்கு வராமல் லீவு எடுத்தார். அதனால் சில தினங்கள் கதையை வேற ட்ராக்கில் கொண்டு போனார்கள். இருந்தாலுமே தொடர்ந்து தன்னால் ஷூட்டிங்க்கு வர முடியல என்று சஞ்சீவ் சொல்லி இருந்தார். என்ன செய்வது என்று புரியாமல் சேனல் மற்றும் தயாரிப்பு தரப்பு யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சஞ்சீவ், போன் செய்து என்னால் சீரியல் ஒளிபரப்பில் எந்த ஒரு பாதிப்புமே ஏற்படக்கூடாது. எனக்கு பதில் வேறொரு நடிகரை கமிட் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். மற்றபடி சோசியல் மீடியாவில் வரும் வதந்திகள் எல்லாமே பொய் என்று கூறியிருக்கிறார்கள்.