‘தலைவா’ வெளியானது ஆகஸ்ட் 9 ல இல்ல – அப்புறம் ஏன் இன்று ‘தலைவா டே’ என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் தெரியுமா?

0
744
Vijay

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் இதை சமீபகாலமாகவே இவரது படங்களில் அரசை எதிர்த்து பல்வேறு வசனங்கள் இருந்ததால் இவரது படங்கள் வெளியாகும்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து கொண்டுதான் இருக்கிறது இந்த பிரச்சனை தற்போது ஆரம்பித்தது கிடையாது தலைவா படத்தின் போதே நடிகர் விஜயின் படங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்கி விட்டது.

Vijay

தலைவா படத்திற்கு பின்னர்தான் விஜய்யின் படங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வந்தது. இப்படி ஒரு நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று சமூக வலைதளத்தில் ‘ தலைவா டே’ என்ற ஹேஷ் டேக்கை சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், உண்மையில் தலைவா திரைப்படம் வெளியானது 2013 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி தான்.

- Advertisement -

2013 ஆகஸ்ட் 9-ம் தேதியன்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் வெளியாக காத்திருந்தது. ஆனால், சொன்ன தேதியில் தலைவா படம் வெளியாகவில்லை. தலைவா படம் வெளியானால், திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு வைப்போம் என்று கடிதம் வந்ததால் படம் வெளியாகவில்லை என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் இதன் பின்னால் இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின.

vijay, Jayalalithaa and S. A. Chandrasekhar

குறிப்பாக தலைவா படத்தின் போஸ்டருக்கு கீழ் ‘Time To Lead’ என்ற வசனம் தான் கரணம் என்றும் கூறப்பட்டது. பின்னர் எப்படியோ விஜய் மற்றும் எஸ் ஏ சி, ஜெயலலிதாவை நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை முடித்தனர். பின்னர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியானது. இருப்பினும் ஆகஸ்ட் 9-ம் தேதி, தலைவா படம் இந்தத் தேதியில் வெளியாகவில்லையென்றாலும் விஜய் ரசிகர்கள் வருடா வருடம் இந்தத் தேதியன்று சமூக வலைதளங்களில் `தலைவா டே’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து காமன் டிபிக்களை வெளியிட்டுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement