நயனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான் ஆனால் – த்ரிஷா சொன்ன உண்மை

0
227
- Advertisement -

பிரபல நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷா இடையில் உள்ள கருத்து வேறுபாடு பற்றிய செய்திகள் தான் இப்போது மீண்டும் இணையத்தில் பரவியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். அதற்கு விதி விலக்காக தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகைகளாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் த்ரிஷா. திரைத்துறையில் பல புது முக நாயகிகள் அறிமுகம் ஆனாலும், இவர்களின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. அதேபோல் தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாகவும், டாப் நடிகைகளாகவும் விளங்குபவர்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும் நயன்தாரா மற்றும் த்ரிஷா, ஆரம்ப காலத்தில் துணை நடிகையாக வந்து, இப்போது முன்னணி நடிகர்களுடன் நடித்த நாயகிகள் ஆக திகழ்கிறார்கள். அதாவது கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரை உலககில் முன்னணி நடிகைகளாக ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்று கூறலாம். இவர்கள் இருவரும் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நிறைய படங்கள் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஹீரோயின்களாக மட்டும் இல்லாமல், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

நயன்தாரா – த்ரிஷா மோதல்:

நயன்தாரா மற்றும் த்ரிஷா ஒரே காலகட்டத்தில் திரைத்துறையில் பயணித்து வருவதால். இவர்கள் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று கூறப்பட்டு வருகிறது. இதற்கு முதல் காரணமே, கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த ‘குருவி’ திரைப்படம் தான் என்கிறார்கள். அதாவது, இந்தத் திரைப்படத்தில் முதலில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க இருந்தாராம். ஆனால், கடைசி நேரத்தில் நயன்தாராவிற்கு பதில் த்ரிஷா ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட காரணம் என்று செய்திகள் வெளியாகின.

திரிஷா விளக்கம்:

மேலும், இவர்கள் இருவருக்கும் தொடர்ந்து மோதல் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக த்ரிஷா ஒரு பேட்டியில், நயன்தாராவுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மைதான். ஆனால், அந்தக் கருத்து வேறுபாட்டிற்கு காரணம் தொழில் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்றும். அதற்கு தனிப்பட்ட விஷயமே காரணம் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

நயன்தாரா விளக்கம்:

அதற்குப் பிறகு நாங்கள் பிரச்சினையை பேசி சரி செய்து கொண்டோம் என்றும், இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்றும் த்ரிஷா ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக நயன்தாரா கூறுகையில், எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததா என்று எங்களுக்கே தெரியவில்லை. ஆனால், சில ஆண்டுகள் பேசாமல் இருந்தோம். பின் த்ரிஷா தான் எனக்கு முதலில் கால் செய்தார். அதனைத் தொடர்ந்து நாங்கள் பேசத் தொடங்கி விட்டோம் என்றும் தெரிவித்திருந்தார்

நயன் – த்ரிஷா படங்கள்:

கடைசியாக நயன்தாரா ‘அன்னபூரணி’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. இப்போது இவர் தமிழ், மலையாளம், கன்னடம் என பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜயுடன் ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவரும் தமிழ், மலையாளம் என்ன பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக இருவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக பார்த்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement