பிரபல சீரியல் நடிகை ‘ப்ரீத்தி ஷர்மா’ தான் நடிக்கும் சீரியலில் இருந்து விலகி இருக்கும் செய்திதான் இப்போது வைரலாகியுள்ளது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகைகளுக்கு தான் இளசுகள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் அதி விரைவில் உருவாகி விடுகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகைகள் சென்றுள்ளனர். வாணி போஜன், பிரியா பவானி சங்கர் என்று பலரும் சின்னத்திரையில் இருந்து சென்றவர்கள் தான். அதேபோல் ‘சித்தி 2’ சீரியல் மூலம் ப்ரீத்தி ஷர்மாவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
‘திருமணம்’ சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் தான் ப்ரீத்தி. அதற்குப் பிறகு இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘சித்தி 2’ சீரியலில் ‘வெண்பா’ என்கிற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென சின்னத்திரையில் இடத்தை நிலைநாட்டினார். அதனைத் தொடர்ந்து இவர் பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தைப் போல, மலர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலர் சீரியல்:
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மலர்’ சீரியலில் இருந்து நடிகை பிரீத்தி ஷர்மா வெளியேறி இருக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது. அவருக்கு பதிலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மோதலும் காதலும்’ தொடரில் நடித்த அஸ்வதி கமிட் ஆகியுள்ளார் என்று தெரிகிறது. தற்போது பிரீத்தி மலர் சீரியலில் இருந்து விலகி இருக்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம்:
அதாவது ப்ரீத்தி ஷர்மாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஆக ஆசை இருந்திருக்கிறது. அதற்காக அவர் நிறைய முயற்சிகள் செய்து கொண்டிருந்தார் என்று தெரிகிறது. அதற்காக இவர் தன் சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை மற்றும்வீடியோக்கள் பகிர்ந்த வண்ணம் இருப்பார். அதனால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சீரியலில் இருந்து விலகி இருக்கிறார் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.
மற்றொரு காரணம்:
மேலும் சிலர், ‘மலர்’ சீரியலில் சில தினங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கிற மாதிரியான ஒரு காட்சியில் ப்ரீத்தி நடிக்க வேண்டியது இருந்ததாம். அப்படி நடிக்க அவர் தயக்கம் காட்டியதாக தெரிகிறது. இந்த காரணத்தால் தான் அவர் தொடரில் இருந்து வெளி ஏறி இருக்கிறார் என்றும் கூறுகின்றனர். தற்போது இந்த சீரியல் 400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிற சூழலில் பிரீத்தி விளக்கியதால் நடிகை அஸ்வதி நடிக்க தொடங்கியுள்ளார் என்றும் தெரிகிறது.
பிரீத்தி பதிவிட்ட வீடியோ:
தற்போது சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக உள்ள ப்ரீத்தி, சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் பாடகி ‘Taylor- Swift’ இன் பாடலை போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்து பலர் கழுவி ஊற்ற ரசிகர் ஒருவர், Taylor Swift ஐ அசிங்கப்படுத்தாதீங்க என்று கமெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது. இப்போது பிரீத்தி தெலுங்கு சீரியலிலும் திரைப்பட வாய்ப்புகள் தேடுவதிலும் பிஸியாக உள்ளார்.