வாரிசு Vs துணிவு ? யாருக்கு எத்தனை தியேட்டர் – வாரிசு வெளியீட்டையும் இத்தனை இடத்தில் வாங்கிய ரெட் ஜெயிண்ட்.

0
502
- Advertisement -

விஜய்யின் வாரிசு திரைப்படத்தை வெளியிட உள்ள மூன்று முக்கிய இடங்களை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. ஆனால், வசூலில் சாதனை செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

- Advertisement -

வாரிசு படம்:

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் மந்தனா, நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

படத்தின் ரிலீஸ்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த பாடல் குறித்தும் விஜய் நடனம் குறித்தும் இணையத்தில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. மேலும், இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை 7ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வாங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

வாரிசு வெளியீடு:

மேலும், படத்திற்கான வியாபாரம் மற்றும் பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தை வெளியிட உள்ள மூன்று முக்கிய இடங்களில் உதயநிதி ஸ்டாலின் தலையீடு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சில இடங்களில் வாரிசு படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தலையீடு:

அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக வாரிசு திரைப்படத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளி வந்திருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அஜித் நடித்திருக்கும் துணிவு படத்தை தமிழகத்தில் பல திரையரங்களில் வெளியிட இருக்கிறது. வாரிசு மற்றும் துணிவு ரிலீசுக்காக ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Advertisement