தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இவர் பல வருடங்கள் முன்பே சினிமாவில் கால்பதித்திருக்க வேண்டியவர். அதுவும் நெல்சன் மூலமாகவே நிகழ இருந்தது. நெல்சன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதுதான், ரெடின் கிங்ஸ்லி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கத்தால், நெல்சன் தனது முதல் படத்தில் ரெடினை இணைத்தார்.
வேட்டை மன்னன் படத்தில் கிங்ஸ்லி :
பின் 2010-ம் ஆண்டு சிலம்பரசன், ஹன்சிகா வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை நெல்சன் தொடங்கினார். இதில் ரெடினும் நடித்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த படம் பாதியிலேயே டிராப் ஆனது. மேலும், நெல்சனை போல் ரெடினுக்கும் திரைத்துறை அறிமுகம் தள்ளிப்போனது. பின் ஏழு வருட போராட்டத்துக்கு பிறகு, ‘கோலமாவு கோகிலா’ மூலம் மீண்டும் நெல்சன், ரெடின் இருவரும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்தார். மீண்டும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது.
அறிமுகப்படுத்திய நெல்சன் :
நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த படம் வசூலில் கோடிகளை குவித்தது. மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படத்தின் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம். டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி பண்டிகை முன்னியிட்டு வெளிவந்த அண்ணாத்தா படத்தில் காமெடியனாக நடித்து இருந்தார்.
ரஜினி முதல் விஜய் படம் வரை :
இதனை தொடர்ந்து ரெடின் அவர்கள் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட், மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள இடியட், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தலை சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், கோஷ்டி, வீட்டுல விஷேசங்க, ஆர்ஜே பாலாஜியின் படம் ஆகிய படங்களில் காமெடி நடிகனாக நடித்து உள்ளார். மேலும், இந்தப் படங்கள் அனைத்தும் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளியாக உள்ளன. இதனால் இனி கோலிவுட் வட்டாரத்தில் ரெடின் கிங்ஸ்லி தான் டாப் காமெடி கிங்காக இருப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
கிங்ஸ்லியின் சீரியஸ் பக்கம் :
இப்படி சினிமாவில் பிரபலமாகுவதற்கு முன் இவர் ஒரு Exhibition ஆர்கனைசராக இருந்திருக்கார். அதோடு பல ஈவண்ட் மேனேஜ்மென்ட்டும் பண்ணியிருக்கிறார். இவரை தமிழ் சினிமாவில் காமெடியனாக பார்த்திருக்கிறோம். ஆனால், இவர் பிசினஸ் என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் ஆகவே மாறி விடுவாராம். இவர் ரொம்ப கண்டிப்பாக தான் வேலை செய்பவர்கள் இடம் இருப்பாராம். ஏன்னா, அப்படி இருந்தால் தான் வேலையாட்களிடம் வேலை வாங்க முடியும் என்று ரெடினே பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் உடையவர்.
அஜித் படத்தில் குரூப் டான்ஸர் :
அஜித் உடைய அவள் வருவாளா படத்தில் குரூப் டான்ஸராக இவர் நடனமாடியிருக்கிறார். மேலும், காமெடி நடிகராக நடித்து வந்தாலும் இவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் பண்ண வேண்டும் என்பது ரொம்ப ஆசையாம். இப்படி மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் ரெடின் அவர்களின் பிறந்த நாள் இன்று. இதற்கு ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவரைப் பற்றிய குறிப்புகளையும் சோசியல் மீடியாவில் ட்ரென்டிங் ஆக்கி வருகிறார்கள்.