நடிப்பதுக்கு முன் ஹீரோவுடன் நீங்கள் அப்படி இருப்பீர்களா ? ரெஜினாவிடம் முகம் சுளிக்கும் வகையில் கேள்வி கேட்ட அபிஷேக். கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
1638
sj
- Advertisement -

தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த படம் ‘கண்ட நாள் முதல்’. இந்த படத்தில் தனது 15 வயதில் அறிமுகம் ஆனவர் ரெஜினா கேசான்ரா. அதன் பின்னர், அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலம் ஆனார் ரெஜினா. இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ராஜதந்திரம் மாநகரம் சரவணன் இருக்கபயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி , சிம்புதேவன் இயக்கி வரும் கசட தபர போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. ஆனால் இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். சமீபித்தல் இவர் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.. இப்படி ஒரு நிலையில் பிரபல சினிமா விமர்சகரான அபிஷேக், ரெஜினாவிடம் கேட்ட முகம் சுழிக்கும் வகையிலான கேள்வி பலரது விமர்சனத்தை பெற்று வருகிறது. சினிமா விமர்சகரான அபிஷேக், நயன்தாரா மற்றும் அதர்வா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்து இருந்தார். அதே போல இவர் பல்வேறு சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து கேலிக்கு உள்ளாவதும் வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் ரெஜினாவை பேட்டி எடுத்தார். அப்போது இவர், ஹீரோவுடன் திடீரென்று ஒரு புரிதலை உண்டாக்கி நடிப்பது கஷ்டமா கஷ்டம் இல்லையா அப்படி ஒரு ஹீரோவுடன் படம் நடிப்பதற்கு முன்பாக ஒரு வேலை அது காதல் கதையாக இருந்தால் ஒரு இரண்டு நாட்கள் அந்த ஹீரோவுடன் பேசுவது அவருடன் நேரத்தை செலவிடுவது போன்றவை நடக்குமா நேரம் உங்களுக்கு இருக்குமா என்று கேட்டிருந்தார். அதற்கு ரெஜினா இல்லை என்று சொன்னார்.

-விளம்பரம்-

ஹீரோவுடன் திடீரென்று ஒரு புரிதலை உண்டாக்கி நடிப்பது கஷ்டமா, கஷ்டம் இல்லையா அப்படி ஒரு ஹீரோவுடன் படம் நடிப்பதற்கு முன்பாக ஒரு வேலை அது காதல் கதையாக இருந்தால் ஒரு இரண்டு நாட்கள் அந்த ஹீரோவுடன் பேசுவது அவருடன் நேரத்தை செலவிடுவது போன்றவை நடக்குமா ? அதற்கான நேரம் உங்களுக்கு இருக்குமா ? ஒரு நடிகரோடு யார் என்றே தெரியாமல் நீங்கள் மிகவும் சவுகரியமாக இருப்பது போல படத்தில் காண்பிப்பதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அபிஷேக் ஒரே ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பாக போட்டோ ஷூட் செய்வது, யார் அந்த படத்தில் நடிக்கிறார் என்பதை தெரிந்துகொள்வது எல்லாம் நடக்கும் தான். அதற்கெல்லாம் மீறி சினிமா துறையில் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள் தானே என்றுகூறி இருந்தார்.

Advertisement