சுனைனாவின் பழிவாங்கும் ரெஜினா படம் எப்படி இருக்கு ? முழு விமர்சனம் இதோ

0
2973
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சுனைனா. தற்போது சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெஜினா. இந்த படத்தை மலையாள இயக்குனர் டொமின் டி சில்வா இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சதீஷ் இசையமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை சதீஸ் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ரித்து மந்திரா, ஆனந்த் நாக், பவா செல்லத்துரை, சாய் தீனா, நிவாஸ் அதிதன், விவேக் பிரசன்னா என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கதாநாயகி ரெஜினாவின் கணவர் வங்கி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவரை கொள்ளைக்காரர்கள் சிலர் கொடூரமாக கொலை செய்து விடுகிறார்கள். ஏற்கனவே பல பிரச்சினைகளை சந்தித்து வரும் ரெஜினாவிற்கு தன்னுடைய காதல் கணவர் இழந்த இழப்பை ஏற்க முடியவில்லை. பின் இவர் குற்றவாளிகளை கைது செய்ய காவல் நிலையத்திற்கு செல்கிறார்.

- Advertisement -

படத்தின் கதை:

எவ்வளவோ போராடியும் ரெஜினாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இனி சட்டத்தை நம்பி பிரயோஜனம் இல்லை என்று கொலை குற்றவாளர்களை கண்டுபிடித்து அவர்களை பழித்தீர்க்க திட்டம் தீட்டுகிறார் ரெஜினா. இந்த திட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தில் மீதி கதை. ரெஜினா என்ற கதாபாத்திரத்தில் சுனைனா நடித்திருக்கிறார். படம் முழுவதுமே அவர் தான் சுமந்து சென்றிருக்கிறார்.

மேலும், பழிவாங்கும் கதையை திரில்லர் பாணியில் சுவாரசியமாக கொடுக்க இயக்குனர் போராடி இருக்கிறார். ஆனால், அந்தப் போராட்டம் பார்வையாளர்கள் மத்தியில் தவறி இருக்கிறது என்று சொல்லலாம். படத்தில் சுனைனா படும் கஷ்டங்களையும் வேதனைகளையும் இயக்குனர் சிறப்பாக காட்ட யோசித்திருக்கிறார். ஆனால், இதுவும் பார்வையாளர்கள் மத்தியில் எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

உடனுக்குடனே கொலை, பழித்திருக்கும் திட்டம் என்று இயக்குனர் எதையோ சொல்ல முயற்சித்து எதையோ காண்பித்திருக்கிறார். படத்தில் காட்சிக்கு காட்சி டீவ்ஸ்ட் வைத்தாலும் ஒன்றும் பெரிதாக சுவாரசியம் இல்லை. டப்பிங் பெரிய பிரச்சனை இருக்கிறது. சுனைனாவின் நடிப்பு ஓகே. மற்றபடி படத்தை பாராட்டும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. பின்னணி இசையும் பாடல்களும் கை கொடுக்கவில்லை. மொத்தத்தில் ஒரு பழிவாங்கும் கதையை கொடுக்க நினைத்து இயக்குனர் என்னென்னவோ செய்துவிட்டார். படம் ரொம்ப ரொம்ப மொக்கையாக இருக்கிறது.

நிறை:

சுனைனா நடிப்பு

பழிவாங்கும் கதை

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படத்தில் ஒன்றுமே இல்லை

குறை:

கதைக்களத்தில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

நடிகர்களை தேர்வில் கவனம் வேண்டும்

இரண்டாம் பாதி மெதுவாக சென்றது

டப்பிங் பிரச்சனை

பின்னணி இசையும் பாடல்களும் செட்டாகவில்லை

மொத்தத்தில் ரெஜினா- ஏமாற்றம்

Advertisement