என்னை பார்த்து யாரும் அப்படி சொல்லிவிடக் கூடாதுனு தான் நடிப்பது இல்லை – பல ஆண்டுகள் ரகசியத்தை உடைத்த மணிரத்னம்.

0
3597
mani
- Advertisement -

தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு, இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் உள்ளனர். படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்கும் மக்கள் மட்டுமின்றி, திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களுக்கும் இவர் ஒரு குருநாதர் போல் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். ஆகையால், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பலரும் இயக்குநர் மணிரத்னமின் ரசிகர்களாக இருக்கின்றனர்.

-விளம்பரம்-

1983-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளி வந்த படம் ‘பல்லவி அணு பல்லவி’. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மணிரத்னம். இதில் ஹீரோவாக அணில் கபூர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் ‘உணரு’ என்ற படத்தை இயக்கினார் மணிரத்னம். அதில் கதாநாயகனாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : இவர் மீது தான் மிகப்பெரிய க்ரஷ். சிறு வயதிலேயே செய்த விஷயத்தை புகைப்படத்துடன் பகிர்ந்த வர்ஷா.

- Advertisement -

‘உணரு’ படத்துக்கு பிறகு தமிழ் திரையுலகில் என்ட்ரியானார் மணிரத்னம். ‘பகல் நிலவு’ என்ற தமிழ் படத்தினை இயக்கினார். அதன் பிறகு ‘இதய கோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை’ போன்ற பல படங்களை இயக்கினார் மணிரத்னம்.

Mani Ratnam's wife Suhasini Ratnam confirms her husband is at his ...

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளி வந்த படம் ‘செக்கச்சிவந்த வானம்’. தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பிரபல நடிகையும், இயக்குநர் மணிரத்னமின் மனைவியுமான சுஹாசினி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.

-விளம்பரம்-

நீங்கள் யாரேனும் மணிரத்னமிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றால் அதை வீடியோவாக 25 வினாடிகள் எடுத்து உங்களை பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்டு 90946 77777 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் அனுப்புங்கள். அனுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இயக்குநர் மணிரத்னம் பதில் அளிப்பார் என்று சுஹாசினி மணிரத்னம் தெரிவித்திருந்தார்.

Image

தற்போது, ரசிகர் ஒருவர் “நீங்கள் ஏன் சினிமாவில் இதுவரை நடிக்கவில்லை. இதுவரை உங்களுக்கு நடிக்க வாய்ப்பு எதுவும் வந்திருக்கிறதா?” என்று மணிரத்னமிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மணிரத்னம் “நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, அவர் இயக்கும் படத்தில் நடிக்க என்னை அணுகினார். ஆனால், நான் ஒரு படம் நடித்து விட்டு அதன் பிறகு மீண்டும் படம் இயக்க செல்லும் போது, அதில் பணியாற்றும் நடிகர்கள் “நீங்க ரொம்ப சுமாரா நடிக்குறதை பார்த்தோமே” என்று என்னை பார்த்து சொல்லிவிடக் கூடாது என்பதால் நான் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை” என்று பதில் அளித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : அஜித்தை விட விஜய் அதிகம் கொடுக்கலாம்ங்க. லைட் மேனின் கண்ணீர் வீடியோ.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னமின் கனவு படமான இதனை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஷோபிதா, அதிதி ராவ் ஹைதரி, அஷ்வின், ஜெயராம் என பல பிரபலமான நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement