அஜித்தை விட விஜய் அதிகம் கொடுக்கலாம்ங்க. லைட் மேனின் கண்ணீர் வீடியோ.

0
26625
lightman
- Advertisement -

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000 நெருங்கியது. இதுவரை இந்தியாவில் 377 பேர் கொரோனாவினால் அநியாயமாக இறந்து உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது இந்த உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
Vijay

கொரோனாவினால் தினந்தோறும் கூலி வேலை செய்யும் மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் தற்போது உணவு தட்டுபாடு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி சிவகார்த்திகேயன், சூர்யா,ராகவா லாரன்ஸ் என பல நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து உள்ளார்கள். பொதுவாகவே இந்த சூழ்நிலையில் நடிகர், நடிகைகள் எல்லாம் எத்தனை வருடங்கள் ஆனாலும், இந்த மாதிரி பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடுவார்கள். ஆனால், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள் மட்டும் தான்.

மேலும், கொரோனாவினால் சினிமா துறையில் உள்ள பல பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஹீரோக்கள், இயக்குனர்கள் தவிர படத்திற்கு பின்னால் பல்லாயிரம் பேர் தங்களுடைய வியர்வை சிந்தி உழைத்து வருகிறார்கள். அதில் லைட்மேன்கள் படும் கஷ்டங்கள் பலருக்கும் தெரியாத ஒன்று. இந்நிலையில் லைட் மேன் என்பவர்களுக்கு தினமும் வேலை செய்தால் மட்டும் தான் அவர்களுக்கு சாப்பாடுக்கே வழி.

-விளம்பரம்-

இப்படி கொரோனாவினால் வேலையின்றி இருக்கும் அவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகின்றனர். ஆனால், இவை எத்தனை நாட்களுக்கு தொடரும் என்பது தான் தெரியவில்லை. இந்த நிலையில் ஒரு லைட் மேன் தனக்கு நேர்ந்த சோகத்தை கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, ஒரு கட்டத்தில் கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை என்று கூறும் நிலைமை ஏற்படுகிறது. இந்த நிலைமை பார்க்கும் போது எல்லாம் மனதை உருக்குகிறது. அஜித் சார் செய்த உதவிக்கு ரொம்ப நன்றி. அஜித்தை விட விஜய் சார் இன்னும் நிறைய செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உதவி செய்யுங்கள் என்று கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். சமீபத்தில் கூட தல அஜித் அவர்கள் 1.25 கோடி ரூபாய் பணத்தை மோடி நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல நடிகர்கள் முன் வந்து தங்களால் முடிந்த உதவி செய்தும் தளபதி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று புரியவில்லை. இது குறித்து பலரும் சோசியல் மீடியாவில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement