அஜித்தை தன் மகனாக நினைத்து ஜெயலலிதா ஆசைப்பட்ட விஷயம், மறுத்துள்ள அஜித் – பிரபலம் சொன்ன Flashback.

0
977
Ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை படங்களில் நடித்து அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் அமராவதி என்ற இருப்பவர் மூலம் தான் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.பின் இவர் தனது உழைப்பினால் உயர்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , மட்டும் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

-விளம்பரம்-

அதற்க்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வலிமை பட இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்துள்ள அஜித் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு.

- Advertisement -

துணிவு படம் :

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கியது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். இந்த கதையில் அஜித் செய்ய லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தில் சில்லா சில்லா , காசேதான் கடவுளடா, கேங்ஸ்டர் உள்ளிட்ட மூன்று பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் துபாயில் Palm Tree Island அருகே அஜித்தின் துணிவு பட பேனருடன் parachuting செய்து விளம்பர படுத்தியிருந்தனர். இந்த நிலையில் பிரபல சினிமா மற்றும் அரசியல் விமர்சகரான செய்யார் பாலு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடனான அஜித்தின் நட்பு குறித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

செய்யார் பாலு கூறியது :

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா ஒரு நெருப்பை போன்றவர், அவரை யாராலும் எளிதில் நெருங்க முடியாது, எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாது அவர் எடுப்பதுதான் கடைசியான முடிவாக இருந்தது. ஆனால் அவருக்கு நடிகர் அஜித்தை மிகவும் பிடிக்கும் ஏனெற்றால் தனக்கு ஒரு மகன் இருந்தால் இவ்வளவு அழகாக சிகப்பாக இருப்பர் என்று ஜெயலலிதாவிற்கு அஜித் மேலே பாசம் இருந்தது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது பொதுவாக அவர் சில முக்கியமான விஷியங்களுக்கு மட்டும்தான் செல்வார் இருந்தாலும் அஜித் மற்றும் ஷாலினி திருமணம் 2000ஆம் ஆண்டு நடந்த போது அவர்களுடைய திருமணத்திற்கு சென்றிருந்தார் ஜெயலலிதா. அதற்கு பிறகு ஜெயலலிதா அஜித்தை தன்னுடைய கட்சிக்கு ஒரு முக்கிய பொறுப்பிற்கு அழைத்ததாகவும் அஜித் வேண்டாம் நான் சினிமாவில் நடித்து கொண்டே இருந்து விடுகிறேன் என்று சொன்னதாகவும் அப்போது ஒரு கிசு கிசு பரவியது என்று அந்த பேட்டியில் நடிகர் அஜித் பற்றி பேசியிருந்தார் செய்யார் பாலு.

Advertisement