விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சமீபத்தில் நிறைவடைந்து இருந்தது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வந்த கோமாளிகள் தான்.
அதிலும் புகழ், பாலா, ஷிவானி, மணிமேகலையின் ரகலைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருந்தது . அதிலும் இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வந்தார். முதல் சீசனை விட இரண்டாம் சீசனில் தான் இவருக்கு ஏகப்பட்ட ரீச் கிடைத்தது. பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான ஷிவாங்கி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் பாதியிலேயே எலிமினேட் ஆனார்.
அதன் பின்னர் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த சீசன் இறுதியில் ஷிவாங்கிக்கு ‘சிம்மக் குரல் சிங்காரி’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மகிழ்ச்சியுடன் வாங்கிய ஷிவாங்கி, நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பொழுது அனைவரும் என்னை மிமிக்ரி செய்கிறீர்கள், இது உன்னுடைய உண்மையான குரல் இல்லை, நடிக்கிறேன் என்று பலவிதமாக கிண்டல் செய்திருக்கிறார்கள்.
ஆனால், இது தான் என்னுடைய உண்மையான குரல். இது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால், இன்று இந்த குரல் எனக்கு ஒரு விருதினை பெற்றுக் கொடுத்து உள்ளது என்று ஆனந்த கண்ணீருடன் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் கைக்குழந்தையாக இருந்த போது எடுத்த ஒரு புகைப்படம் போலவே தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.