ஆன்மீக நம்பிக்கைகளை பர்சனலாக வைத்திருக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது – ராமர் கோவில் குறித்து ரேவதி.

0
446
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே அயோத்தி ராமர் கோயில் குறித்த செய்தி தான். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமர் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் கோயில் கொண்டுள்ளது.

-விளம்பரம்-

மேலும், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமான் மற்றும் கருடா போன்ற சிலைகள் இருக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று முன் தினம் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாகி இருக்கிறது.

- Advertisement -

இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு முழுவதும் காண வருகை தந்தனர்.மேலும், பொதுமக்கள் மட்டுமல்லாது ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டுஇருந்தனர். இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மோடியின் தலைவர்கள், இந்திய சினிமாவின் பிரபல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீக்ஸிட், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், விக்கி கவுசல் மற்றும் கத்ரீனா கைஃப், கங்கனா ரனாவத், சச்சின் என பலர் கலந்து கொண்டு இருந்தனர். இந்தியா முழுவதும் இந்த நாளை அனைவருமே சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் பிரபல நடிகை ரேவதி அயோத்தி ராமர் பற்றி பதிவிட்டு இருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.

-விளம்பரம்-

“நேற்று ஒரு மறக்க முடியாத நாள். நானா இப்படி.. ராமரின் முகத்தை பார்த்ததும் வந்த உணர்வு அப்படி இருந்தது. எனக்குள் உணர்வுகள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.விசித்ரமான விஷயம் என்னவென்றால் ஹிந்துக்களாக இருக்கும் நாம் நமது நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது என நினைத்து நாம் அப்படி செய்கிறோம்.”

மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மீக நம்பிக்கைகளை பர்சனலாக வைத்திருக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது. “ஸ்ரீ ராமரின் வருகை இந்த விஷயத்தை பலரிடம் மாற்றி இருக்கிறது. நாம் ராமரின் பக்தர்கள் என முதல் முறை சத்தமாக சொல்ல இருக்கிறோம். ஜெய் ஸ்ரீ ராம்” என ரேவதி தெரிவித்து இருக்கிறார். ரேவதியின் இந்த பதிவிற்கு வரவேற்பு ஒருபுறமும் விமர்சனங்கள் ஒரு புறமும் குவிந்து வருகிறது.

Advertisement