பலரை ஷாக்காக்கிய பிரபல விமர்சகர் கௌசிக்கின் திடீர் மரணம் – அவர் வைத்திருந்த கடைசி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்.

0
196
kausik
- Advertisement -

சினிமா விமர்சகர் கௌசிக்கின் கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வலம் வரும் பிரபலமான விமர்சகர்களில் ஒருவர் கௌசிக். இவர் சினிமா புரமோஷன், சினிமா விளம்பரம், சினிமா விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வந்தார். அதுமட்டுமில்லாம பிஆர்ஓ தொடர்பான பணிகளையும் இவர் செய்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சினிமா தொடர்பான தகவல்களை அடிக்கடி மக்களுக்கு தெரிவித்திருந்தார். இவர் தனியாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். இந்த நிலையில் இவர் திடீரென்று சில தினங்களுக்கு முன் மரணமடைந்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இறப்பதற்கு காலையில் கூட இவர் சலார் உள்ளிட்ட சில படங்கள் பற்றிய அப்டேட்களை வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

கௌசிக் மரணத்திற்கு காரணம்:

இப்படி ஒரு நிலையில் அன்று மாலை வேறு ஒரு சினிமா நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதாக இருந்தது. அதற்கு முன்பு இவர் வீட்டில் ஓய்வெடுக்க உறங்க சென்று இருந்தார். ஆனால், உறங்கும் போது இவர் மரணம் அடைந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. தூக்கத்திலேயே இவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டிருக்கிறது. இதுவே இவரின் மரணத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

கௌசிக் மரணம்:

மேலும் நிகழ்ச்சிக்கு வருவதாக சொன்னவர் வரவில்லை என்பதற்காக கௌசிக் வீட்டிற்கு சிலர் சென்றிருந்தார்கள். அப்போது தான் அவர் இறந்து இருப்பதை கண்டுபிடித்தனர். இவருடைய மரணம் தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அவருக்கு 35 வயது தான் ஆகிறது. பல முன்னணி சினிமா நட்சத்திரங்களுக்கும் இவர் மிக நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இருப்பது:

முன்னணி நட்சத்திரங்கள் பலர் இவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கௌசிக் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, நல்ல உடல் நலம் தான் நம்முடைய சொத்து. மற்றதெல்லாம் அதற்குப் பின்புதான். வலியை மறந்து விடுங்கள். வாழ்க்கையில் விட்டுக் கொடுக்க கூடாது என்று தனது வாட்ஸ் அப்பில் பயோ ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். அவரின் இந்த பயோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

வைரலாகும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் :

தற்போது இவருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும், உடல் நலம் குறித்து கவனமாக இருந்தவருக்கு மாரடைப்பு எப்படி வந்தது? என்ன கொடுமை? 35 வயதிலேயே ஒருவருக்கு மாரடைப்பு வந்தது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கௌசிக் மரணம் பலருக்கும் பாடமாக பார்க்கப்படுகிறது.

Advertisement