Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2022.01.07பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 3 நிமிடம்

எப்படி இருக்கிறது ஹிப் ஹாப் ஆதியின் 'அன்பறிவு' - முழு விமர்சனம் இதோ.

எழுதியவர்Rajkumar7 ஜனவரி, 2022 அன்று 12:57 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

ஹிப் ஹாப் இசையமைப்பாளராக வலம் வந்த ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த சிவகுமாரின் சபதம் படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஆதி அன்பறிவு என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

எப்படி இருக்கிறது ஹிப் ஹாப் ஆதியின் 'அன்பறிவு' - முழு விமர்சனம் இதோ.

இந்த படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கி இருக்கிறார். மேலும், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் முதல் டபுள் ஆக்சன் திரைப்படமாக அன்பறிவு படம் உள்ளது. இந்த படம் இன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நெப்போலியன், விதார்த், ஆஷா சரத், சாய்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நெப்போலியன் மக்கள் செல்வதோடு வாழ்ந்து வருகிறார். அவரிடம் உதவியாளராக பணிபுரிகிறார் விதார்த். அரசியலில் தனக்கு பதவி கிடைக்க வேண்டுமென ஆசைப்படுகிறார் விதார்த். சாய்குமார் நெப்போலியன் மகளை திருமணம் செய்து கொள்கிறார். பின் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. இப்படி ஒரு நிலையில் விதார்த்துக்கு கிடைக்க வேண்டிய பதவி நெப்போலியன் மருமகன் சாய்குமார் கிடைக்கிறது. இதனால் ஆத்திரமடையும் விதார்த் நெப்போலியன் குடும்பத்தை சதி செய்து பிரிக்கிறார். படத்தில் அன்பு, அறிவு என்ற இரட்டை வேடத்தில் ஆதி நடித்திருக்கிறார்.

எப்படி இருக்கிறது ஹிப் ஹாப் ஆதியின் 'அன்பறிவு' - முழு விமர்சனம் இதோ.

இவர் குழந்தையாக இருந்தபோதே குடும்ப பிரச்சினையால் பிரிந்து விட்டார்கள். அன்பு தனது தாயார் லட்சுமி மற்றும் தாத்தா முனியாண்டி ஆகியோருடன் சேர்ந்து ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட முரட்டுத்தனமான மனிதராக வளர்கிறார். அறிவு தன்னுடைய தந்தை பிரகாசத்துடன் கனடாவில் வசதியாக நல்ல படித்த இளைஞனாக வருகிறார். பின் பகையின் காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்பம் பிரிந்தது என்று தெரிந்தவுடன் அறிவு குடும்பத்தை இணைக்க போராடுகிறார்.

அறிவு தன்னுடைய குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்ந்தாரா?அன்பு -அறிவு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ஆக்ஷன் காட்சிகள், ஸ்லோ மோஷன் காட்சிகள் என பல விஷயங்களை இயக்குனர் நேர்த்தியாக செய்திருக்கிறார். குடும்ப உணர்வு, அதனுடைய மதிப்புகள், அன்பு, பாசம் என்ற பாணியில் கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். படத்தில் மதுரைக்காரர்கள் பெருமையையும், அவர்களுடைய பாடி லாங்குவேஜ், சண்டை, வம்பிழுக்கும் காட்சிகள் போன்ற விஷயங்களை எல்லாம் அழகாக காண்பித்திருக்கிறார்.

எப்படி இருக்கிறது ஹிப் ஹாப் ஆதியின் 'அன்பறிவு' - முழு விமர்சனம் இதோ.

ஆனால், ஒரு மணி நேர கதையை மூன்று மணி நேரம் இழுத்திருப்பது கடுப்பேற்றி இருக்கிறது. படத்தில் ஆதி போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பேசி இருக்கிறார். வழக்கம் போல அண்ணன்-- தம்பி பிரச்சினையை தான் 3 மணி நேரம் இழுத்துக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். பழைய கதையாக இருந்தாலும் கொஞ்சம் மாற்றியிருந்தார் ரசிகர்களும் ரசிக்கும்படியாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அன்பறிவு படத்தில் பல காட்சிகள் பழைய படங்களின் சாயல் வந்திருப்பதாக கூறப்படுகிறது என்பது பார்வையாளர்கள் கருத்து.

வில்லனாக வரும் விதார்த் வழக்கமான படங்களை விட இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். ஆதி இரண்டு வேடத்தில் நடித்திருப்பது பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஆனால், இரண்டு கதாபாத்திரங்களை வேறுபடுத்தி இருப்பதற்கு கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால் பல இடங்களில் அன்பு, அறிவு ஒரே மாதிரியாக தெரிகிறது. வழக்கம்போல் நெப்போலியன் தன் உடைய கம்பீரமான தோற்றம், அனுபவ நடிப்பால் அசத்தி இருக்கிறார். அதோட பின்னணி இசை படத்திற்கு ஆதரவாக இருக்கிறது. புதிய திரைக்கதை, படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் படம் முழுமையான பக்க என்டர்டைன்மெண்ட் படமாக அமைந்திருக்கும்.

எப்படி இருக்கிறது ஹிப் ஹாப் ஆதியின் 'அன்பறிவு' - முழு விமர்சனம் இதோ.

நிறைகள் :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.

ஆதி இரட்டை வேட நடிப்பு நன்றாக இருக்கிறது.

எப்படி இருக்கிறது ஹிப் ஹாப் ஆதியின் 'அன்பறிவு' - முழு விமர்சனம் இதோ.

குறைகள் :

வழக்கமான அண்ணன் தம்பி பாசத்தை காட்டி இருக்கிறார்கள்.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்தால் நன்றாக இருக்கும்.

வழக்கமான மாவையே அரைத்து இருக்கிறார் இயக்குனர்.

ஒரு மணி நேர கதையை மூன்று மணி நேரம் எடுத்து சென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் சளிப்படைய செய்து இருக்கிறது.

இறுதி அலசல் :

அன்பறிவு ஒன்றும் புதிதான கதை இல்லை பல ஆண்டுகள் வந்த அதே பழைய கதை தான். உதாரணமாக உத்தமபுத்திரன், வேல், வந்த ராஜாவா தான் வருவேன் போன்ற படங்களின் லிஸ்டில் இந்த படத்தை சேர்க்கலாம். மொத்தத்தில் அன்பறிவு - அன்பு, அறிவு இரண்டுமே முக்கியம் என்பதை காட்டி விட்டது. குடும்ப ரசிகர்களை மட்டுமே ஒரு படம். சீரியல் பார்ப்பவர்களுக்கு நல்ல தேர்வு தான்.

தலைப்புகள்
#hip hop aadhi#Anbarivu Movie Review#Anbarivu#ஹிப் ஹாப் ஆதி#அன்பறிவு#அன்பறிவு விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement