Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2021.04.09பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 3 நிமிடம்

மீண்டும் ஒரு அசுரனா 'கர்ணன்' - முழு விமர்சனம் இதோ.

எழுதியவர்Rajkumar9 ஏப்ரல், 2021 அன்று 12:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் இன்று (ஏப்ரல் 9) வெளியாகியுள்ளது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த படத்தை பற்றிய விமர்சத்தை தற்போது காணலாம்.

மீண்டும் ஒரு அசுரனா 'கர்ணன்' - முழு விமர்சனம் இதோ.

கதை :

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'கர்ணன்'.

ஒரு சாலையில் ஒரு இளம் பெண் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு துடித்துக் கொண்டிருக்கிறார். சாலையின் இரண்டு புறமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்க, அவரை யாரும் கண்டுகொள்ளாமல் செல்கின்றனர். அவர் துடித்துக் கொண்டு இருக்கும்போதே இறந்து விடுகிறார். உடனே கேமரா ஆகாயத்தை நோக்கி செல்கிறது. அதன்பின்னர் இணையத்தில் ஹிட்டடித்த 'கண்டா வர சொல்லுங்க' பாடல் ஒலிக்கிறது. மக்கள் அனைவருமே கர்ணனை வரச்சொல்லுங்க என்று ஆர்ப்பரிக்க ஒரு ஆரவாரத்தோடு தொடங்குகிறது இந்த படம்.

கால்கள் முழுக்க ரத்தம் சொட்ட சொட்ட போலீஸ் பூட்ஸ் கால்கள் கர்ணனின் கால்லை அழுத்திக்கொண்டு முகத்தில் ஒரு கருப்பு துணியால் மறைக்கப்பட்டு கர்ணனை காண்பிக்கிறார்கள். அப்படியே படம் 1997 - ற்கு சென்று, கர்ணன் யார் ? அவரை ஏன் ஊர் மக்கள் அனைவரும் ஹீரோ போல கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் எழ வைத்து படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே நம்மை படத்தோடு அழைத்து சென்றுவிடுகிறார் மாரி செல்வராஜ்.

மீண்டும் ஒரு அசுரனா 'கர்ணன்' - முழு விமர்சனம் இதோ.

பொடியன்குளம் என்ற கிராமத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் ஊரில் சில அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்படுவதை எண்ணி அடிக்கடி முறையிடுகின்றனர். அதில் ஒரு முக்கிய விஷயமாக தங்கள் ஊரில் பேருந்து நிறுத்தம் கூட இல்லை, தங்கள் ஊரில் பேருந்து கூட நிற்பது கிடையாது என்று போராடி வருகின்றனர். அதற்கு காரணம் இவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் மேலூர் என்ற ஊரில் இருக்கும் உயர் சாதிகாரர்கள் தான்.

எப்போதும் பொடியன்குளம் மக்கள் அனைவரும் தங்களை நாடியே இருக்க வேண்டும் என்பதர்க்காக பொடியன்குளம் மக்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காமல் தடுத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தான் பொடியன்குளத்தில் தைரியமான இளைஞசராக இருக்கும் கர்ணன், தங்கள் ஊர் பிரச்சனைகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து வைக்க நினைக்கிறார். குனிந்து கெஞ்சினாள் உரிமை கிடைக்காது, நிமிர்ந்து தைரியமாக போராடுவோம் என்று தனது மக்களுக்காகவும், தங்களது உரிமைக்காகவும் போராடுகிறார் கர்ணன். இறுதியில் பொடியன்குளம் மக்களுக்கு கர்ணன் என்ன செய்தார், தன் ஊர் மக்களின் உரிமைக்காக மேல் சதிக்காரர்கள் எதிர்ததால் கர்ணன் வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

மீண்டும் ஒரு அசுரனா 'கர்ணன்' - முழு விமர்சனம் இதோ.

பிளஸ் :

படத்தின் முக்கியமான பிளஸ் என்றால் படத்தின் கதாபாத்திர தேர்வு தான். நடிப்பு அசுரன் என்று ஏற்கனேவே நிரூபித்த தனுஷை விட்டுவிடுவோம். ஆனால், படத்தின் வரும் லால் மற்றும் சில நடிகர்களின் நடிப்பு தனுசுடன் போட்டி போடுகிறது.

இரண்டாவது பலம் என்றால் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் தான்.

அடுத்தபடியாக இது 1997 -ல் நடக்கும் படம் என்பதால் அதனை உணர்ந்து தத்ருபமாக காட்டிய ஆர்ட் டைரக்டருக்கும், அதனை படமாக்கிய கேமராவிற்கு படத்தின் மிகப்பெரிய பங்குண்டு.

அசுரன் படத்தின் இருப்பது போல படத்தில் மெய் சிலிர்க்க வைக்கும் பல காட்சிகள் உள்ளது.

தனுஷ் மற்றும் லால் போலவே, படத்தில் நடித்துள்ள நாயகிரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி ஆகியோர்களின் நடிப்பும், அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பில் மாரி செல்வராஜின் நேர்த்தி தெரிகிறது.

மைனஸ் :

பிடத்தில் மைனஸ் என்று சொல்ல பெரிதாக இல்லை என்றாலும், படம் கொஞ்சம் நீளமாக செல்வது போல ஒரு பீல்.

ஏற்க்னவே ரஞ்சித்,மாரி செல்வராஜ், வெற்றி மாறன் ஆகியோர் எப்போதும் தங்கள் படங்களில் மேல் சாதியினரை தவறாக சித்தரிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த படமும் அதயே தான் காண்பித்து இருக்கிறது.

இறுதி அலசல் :

இந்த படத்தின் மூலம் மீண்டும் தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை நிரூபித்து உள்ளார் தனுஷ். இந்த படத்திற்கும் அவருக்கு தேசிய விருது கொடுத்தாலும் தகும். மாரி செல்வராஜின் சமூகத்தின் மீது வைத்துள்ள அக்கறை இந்த படத்திலும் தெளிவாக தெரிந்தாலும். இந்த படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறை சொல்லும் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் கர்ணன் உரிமையை மீட்டெடுக்க வந்துள்ள மற்றொரு அசுரன். படம் ஒரு பிளாக் பஸ்டர் என்பது நிச்சயம்.

தலைப்புகள்
#கர்ணன்#karnan#கர்ணன் விமர்சனம்#Karnan Review
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement