Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2021.12.18பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 3 நிமிடம்

தியேட்டரில் வந்ததே தெரியாமல் போன படம் - Netflixல் படு சூப்பர் ஹிட்- 'கடைசீல பிரியாணி ' விமர்சனம்.

A
எழுதியவர்Ajju18 டிசம்பர், 2021 அன்று 10:18 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமாவை பொறுத்த வரை ஒரு சிலபுது முக நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வெளியாகும் போது அது நல்ல படமாகவே இருந்தாலும் அதை நாம் கண்டுகொள்ளாமல் இருந்திருப்போம். அப்படி மிஸ் செய்யப்பட்ட படங்களை நாம் போர் அடிக்கும் போது இணையத்திலோ டிவியிலையோ பார்த்துவிட்டு 'ச்ச இந்த படத்தை எப்படி தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டோமே' என்று வருந்தியும் இருப்போம், அப்படிபட்ட படம் தான் நாம் தற்போது விமர்சனமாக பார்க்க இருக்கும் 'கடைசீல பிரியாணி' திரைப்படம். இந்த திரைப்படம் கடந்த மாதமே திரையரங்குகளில் வெளியாகிவிட்டது.

தியேட்டரில் வந்ததே தெரியாமல் போன படம்  - Netflixல் படு சூப்பர் ஹிட்- 'கடைசீல பிரியாணி ' விமர்சனம்.

Netflixல் வெளியீடு :

ஆனால், இப்படி ஒரு படம் வந்தது கூட யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தான் இந்த படம் Netflixல் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த பலர் இந்த படம் குறித்து சமூக வலைதளத்தில் படத்தை பற்றி எழுத் ஆரம்பித்துவிட்டனர். அப்படி என்ன தான்பா இந்த படம் என்ற விமர்சனத்தை தற்போது காணலாம். இயக்குனர் நிஷாந்த் களிதிண்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் கடைசீல பிரியாணி. இந்த படத்தை ஒய்நாட் எக்ஸ், மேஸ்ட்ரோஸ் & பனோரமாஸ் புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜுடா பால் - நீல் செபாஸ்டியன் இசையமைத்துள்ளார்கள். இந்த படத்தில் வசந்த் செல்வன், ஹக்கீம் ஷாஜகான், விஜய் ராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

கதைக்களம்:

படத்தில் ஒரு ஊரில் அப்பா, மகன்கள் மூன்று பேர் வாழ்ந்து வருகிறார்கள். அப்பா கேரளா ரப்பர் எஸ்டேட்டில் வேலை செய்கிறார். பின் அங்கு ரப்பர் எஸ்டேட் ஓனருக்கும் ஹீரோ அப்பாவுக்கும் இடையே தகறாரு ஏற்படுகிறது. இதனால் ரப்பர் எஸ்டேட் ஓனர் ஹீரோ அப்பாவை கொன்று விடுகிறார். பின் தங்களின் அப்பாவை கொன்ற கேரள ரப்பர் எஸ்டேட் ஓனரை தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மூன்று மகன்கள் திட்டம்போட்டு பழிக்குப்பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்று அவரை கொல்ல செல்கிறார்கள்.

தியேட்டரில் வந்ததே தெரியாமல் போன படம்  - Netflixல் படு சூப்பர் ஹிட்- 'கடைசீல பிரியாணி ' விமர்சனம்.

திட்டமிட்டபடி அந்த மகன்கள் ரப்பர் எஸ்டேட் ஒனரை கொண்டாற்களா? இல்லையா? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்?என்பதே படத்தின் மீதிக்கதை. முதல் பாதி முழுவதும் அண்ணன், தம்பிகள் மூவரும் அந்த எஸ்டேட் ஓனரை தேடுவதிலேயே படம் நகர்கிறது. பின் எஸ்டேட் ஓனர் கொல்லப்படுகிறார். எஸ்டேட் ஓனரை கொலை செய்து விட்டு ஓடும் அவர்களிடம் விதி விளையாடுகிறது. கடைசியில் ஹீரோ மட்டும் தப்பி காட்டுக்குள் செல்கிறார்.

தன் அப்பாவை கொண்டவர்கள் போலீஸ் உதவியுடன் ஓனரின் மகன் பழிவாங்க துடிக்கிறார். இரண்டாம் பாதி பல பயங்கர சுவாரஸ்யத்துடன் கதை செல்கிறது. மேலும், பல இடங்களில் கைதட்டல் வாங்கும் அளவிற்கு காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படத்தில் அண்ணன் தம்பிகளாக வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களின் மூத்த அண்ணனாக நடித்திருக்கும் வசந்த் தன்னுடைய நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். கடைசி தம்பி விஜய் ராம் படத்தின் நாயகனாகவும், கதைக் களத்திற்கு அப்பாவியாகவும் வருகிறார்.

தியேட்டரில் வந்ததே தெரியாமல் போன படம்  - Netflixல் படு சூப்பர் ஹிட்- 'கடைசீல பிரியாணி ' விமர்சனம்.

தம்பி விஜய் ராம் ஓனரின் மகன் ஹக்கீம் ஷாஜகான் இடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே படத்தினுடைய உச்சகட்ட சுவாரசியம். படத்தில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு காட்சிகளும் பின்னணி இசையும், பிஜிஎம் எல்லாமே அற்புதமாக அமைந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் நகைச்சுவை காட்சிகளும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மேலும், ஒரு காடு அதை சுற்றி நடக்கும் கதை, பழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் என்ற ஆக்ஷன் திரில்லர் பாணியில் கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் எடுத்த கதைகளம் அருமையாக வந்திருக்கிறது. அந்த சூழலுக்கு ஏற்ப பின்னணி இசை ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படம் கடந்த மாதமே திரையரங்களில் வெளியானது. ஆனால், இது யாருக்குமே தெரியவில்லை. மீண்டும் இந்த படத்தை netflix வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் கதை களமும் கொண்டுபோன விதமும் அருமையாக இருப்பதால் படம் சூப்பராக உள்ளது. புதுமுகம் என்பதால் பார்ப்பதற்கு தயக்கம் காட்டாமல் யாரும் மிஸ் பண்ணாமல் பாருங்கள்.

தியேட்டரில் வந்ததே தெரியாமல் போன படம்  - Netflixல் படு சூப்பர் ஹிட்- 'கடைசீல பிரியாணி ' விமர்சனம்.

பிளஸ்:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

கதைக்களம் அருமை சூப்பர்.

வித்தியாசமான முறையில் இயக்குனர் கதையை கையாண்டிருக்கிறார்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பக்கபலமாக உள்ளது.

தியேட்டரில் வந்ததே தெரியாமல் போன படம்  - Netflixல் படு சூப்பர் ஹிட்- 'கடைசீல பிரியாணி ' விமர்சனம்.

மைனஸ்:

புதுமுக நடிகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஈர்க்கவில்லை என்று சொல்லலாம்.

படத்தில் காமெடிகள், அதிரடி சண்டைக்காட்சிகள் அழுத்தமாக இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக எந்த ஒரு குறையும் இல்லை.

மொத்தத்தில் கடைசீல பிரியாணி -- அருமையான சுவையில் வந்திருக்கிறது.

தலைப்புகள்
#Kadaseela Biriyani Review#கடைசீல பிரியாணி விமர்சனம்#கடைசீல பிரியாணி#Kadaseela Biriyani
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement