Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2022.11.04பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எப்படி இருக்கிறது 'லவ் டுடே' முழு விமர்சனம் - கூடவே ரசிகர்களின் FDFS Review.

A
எழுதியவர்Arun4 நவம்பர், 2022 அன்று 01:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. இன்று வெளியாகியிருக்கும் லவ் டுடே படம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

எப்படி இருக்கிறது 'லவ் டுடே' முழு விமர்சனம் - கூடவே ரசிகர்களின் FDFS Review.

கதைக்களம்:

படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார். ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். அவரிடம் தங்களுடைய காதலை பற்றி பேசுகிறார் பிரதீப். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார்.

அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் நீங்கள் இருவரும் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் காதலர்கள் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

https://www.youtube.com/watch?v=5lyHUD6p5mY&feature=youtu.be

இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இன்றைய கால காதல் எப்படி இருக்கிறது? என்பதை தெளிவாக படத்தில் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். அதனால் இந்த திரைப்படத்தை ஆர்வத்துடன் இளைஞர்கள் பார்த்து வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றது. இன்றைய கால கதையை கேவலப்படுத்தும் தலைமுறைக்கு புத்தி புகட்டும் விதமாக இந்த படம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

காதல் என்பது என்ன என்பதை அழகாக இயக்குனர் படத்தில் காண்பித்து இருக்கிறார். படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். அதிலும் 90ஸ் கிட்ஸ் கால காதல் தான் உண்மை காதல் என்று மாறு தட்டி சொல்லும் அளவுக்கு இந்த படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் இன்றைய தலைமுறைகளையும் யோசிக்க வைத்திருக்கிறது என்பதை சொல்லலாம்.

எப்படி இருக்கிறது 'லவ் டுடே' முழு விமர்சனம் - கூடவே ரசிகர்களின் FDFS Review.

மேலும், படத்தின் சில காட்சிகளை நீக்கிவிட்டு 2 மணி நேரம் 34நிமிடங்கள் படம் ஓடி இருக்கிறது. முதல் பாதியில் ஒரு மணி நேரம் 24 நிமிட காட்சிகளும், இடைவெளிக்கு பின் ஒரு மணி நேரம் 10 நிமிடமும் ஓடி இருக்கிறது. படம் வெளியாகி முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பலருமே நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். அதிலும் சிலர், சிரிச்சு சிரித்து வயிறு வலிக்கிறது, இன்றைய கால இளைஞர்களுக்கு தேவையான படம் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இனி வரும் காலங்களிலும் படம் வசூல் ரீதியாக வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைகள் :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இன்றைய கால காதல் கதையை அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர்.

நகைச்சுவை சிறப்பு.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

எப்படி இருக்கிறது 'லவ் டுடே' முழு விமர்சனம் - கூடவே ரசிகர்களின் FDFS Review.

குறைகள் :

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தவிர மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படத்தில் பெரிய குறைகள் எல்லாம் இல்லை.

காதல் கதை என்பதால் இன்றைய இளைஞர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். மொத்தத்தில் லவ் டுடே - நீண்ட நாள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புகள்
#Love Today#Love Today Review#லவ் டுடே#லவ் டுடே விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement