Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பிரின்ஸ் தோல்வியில் இருந்து சிவகார்த்திகேயனை மீட்டதா 'மாவீரன்' - முழு விமர்சனம் இதோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/விமர்சனம்2023.07.14பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிரின்ஸ் தோல்வியில் இருந்து சிவகார்த்திகேயனை மீட்டதா 'மாவீரன்' - முழு விமர்சனம் இதோ.

A
எழுதியவர்Arun14 ஜூலை, 2023 அன்று 01:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாவீரன். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் மிஷ்கின், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. மேலும், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்

பிரின்ஸ் தோல்வியில் இருந்து சிவகார்த்திகேயனை மீட்டதா 'மாவீரன்' - முழு விமர்சனம் இதோ.

கதைக்களம்:

படத்தில் கரையோரம் வாழ்ந்து வரும் மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அரசு கொண்டு செல்கிறது. ஆனால், அரசு வழங்கிய அந்த அடுக்குமாடி வீடு தரமில்லாமல் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் கதாநாயகன் சத்யா குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது. பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையில் அரசியலுடைய அதிகாரம் இருப்பதால் கதாநாயகனால் எதுவும் செய்யாமல் போகிறது.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கதாநாயகன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார்.
அப்போது அவருக்கு பின்னால் ஒரு குரல் கேட்கிறது. அதுவரை என்ன செய்வதென்று புரியாமல் பரிதவித்த கதாநாயகன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். அந்த குரலினால் அவருடைய வாழ்க்கையே மாறுகிறது. அந்த குரல் யார்? கதாநாயகனின் பிரச்சனை தீர்ந்ததா? அரசியலின் அதிகாரம் என்ன ஆனது?
என்பதே படத்தின் மீதி கதை.

பிரின்ஸ் தோல்வியில் இருந்து சிவகார்த்திகேயனை மீட்டதா 'மாவீரன்' - முழு விமர்சனம் இதோ.

சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்திருக்கிறார். ஒரு புது முயற்சியை இந்த படத்தில் கையில் எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஒரு கோழையாக இருக்கும் ஒரு நபர் அவனுடைய அனுமதி இல்லாமல் ஆக்ஷனாக மாறினால் என்ன ஆகும் என்ற கதாபாத்திரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் எமோஷன், காமெடி, சண்டை என எல்லா உணர்வுகளையும் சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.

யோகி பாபுவின் காமெடி சிரிப்பு மழையில் வெடித்து இருக்கிறது என்று சொல்லலாம். இவர்களை அடுத்து கதாநாயகியாக அதிதி நடித்திருக்கிறார். இவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவும், அருமையாகவும் செய்திருக்கிறார். வில்லனாக மிஸ்கின் நடித்திருக்கிறார். காமெடி கலந்த வில்லத் தளத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று சொல்லலாம். இவர்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அம்மாவாக சரிதா நடித்திருக்கிறார். தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பிரின்ஸ் தோல்வியில் இருந்து சிவகார்த்திகேயனை மீட்டதா 'மாவீரன்' - முழு விமர்சனம் இதோ.

ஒரு சவாலான கதையை திறமையாக சுவாரஸ்யம் குறையாமல் இயக்குனர் கொண்டு சென்றிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஒரு புது கதை களத்தை வித்தியாசமான முறையில் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் கொண்டு சென்று இருக்கின்றது என்று கூறப்படுகிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான். மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு குறைகளும் இல்லை. சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயன் இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததற்கு இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறை:

சிவகார்த்திகேயன் நடிப்பு சிறப்பு

காமெடி அசத்தல்

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

இயக்குனர் கதைக்களத்தை கையாண்ட விதம் சிறப்பு

வித்தியாசமான கதைக்களத்தை சுவாரசியமாக இயக்குனர் கொடுத்து இருக்கிறார்

பிரின்ஸ் தோல்வியில் இருந்து சிவகார்த்திகேயனை மீட்டதா 'மாவீரன்' - முழு விமர்சனம் இதோ.

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

முதல் பாதி நீளமாக இருக்கிறது

மற்றபடி பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எல்லாம் குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன்- வெற்றி பாதைக்கு செல்லும்

பிரின்ஸ் தோல்வியில் இருந்து சிவகார்த்திகேயனை மீட்டதா 'மாவீரன்' - முழு விமர்சனம் இதோ.
தலைப்புகள்
#மாவீரன்#சிவகார்த்திகேயன்#மாவீரன் விமர்சனம்#Maaveeran#Maaveeran Review#Sivakarthikeyan
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement