Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2021.11.04பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எம் ஜி ஆர் மகன் - முழு விமர்சனம் இதோ.

எழுதியவர்Rajkumar4 நவம்பர், 2021 அன்று 01:52 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'எம் ஜி ஆர் மகன்'. இந்த படத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உட்பட பல சினிமா நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படம் நகைச்சுவை-- அதிரடி கதையில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ள இந்த படத்தின் திரைவிமர்சனத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.

MGR Magan - Official Trailer | Sasikumar | Ponram | Anthony Daasan - YouTube

கதைக்களம்:

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சத்யராஜ் அவர்கள் வைத்தியராக இருக்கிறார். படத்தில் சத்யராஜுக்கு மகனாக சசிகுமார் நடித்துள்ளார். சத்யராஜ் மருத்துவத்திற்கு பயன்படும் மூலிகை நிறைந்த ஒரு மலையை பழ கருப்பையா என்பவர் விலைக்கு வாங்குகிறார். இதனால் சத்யராஜூக்கும், பழ கருப்பையாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இவர்களுடைய பிரச்சனை கோர்ட், கேசு என்று நீதிமன்றம் வரை செல்கிறது. பின் இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காக சத்யராஜ் தனது மகன் சசிகுமாரை வக்கீலுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அதற்காக சத்யராஜ் பல முயற்சிகளை செய்கிறார். ஆனால், சசிகுமார் 12 ஆம் வகுப்பிலேயே அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யராஜ் தன் மகன் சசிகுமாரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். பின் இருவருக்கும் இடையே சில சில தகராறுகளும், பிரச்சினைகளும் ஏற்படுகிறது. கடைசியில் அந்த மூலிகை மலையை சத்யராஜ் கைப்பற்றினாரா? இல்லையா? தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா? சசிகுமார் தன் தந்தையின் கனவை நிறைவேற்றினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

MGR Magan Release Date And Streaming Time On Disney+ Hotstar, Details Here  - Filmibeat

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கி இருந்தார். அதே பாணியில் தான் எம்ஜிஆர் மகன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் பொன்ராம் அரைத்து இருக்கிறார். மேலும், படத்தில் ரசிக்கும் படியான காட்சிகளும், காமெடி சீன்களும் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். இவர் இதற்கு முன் இயக்கிய படங்களில் எல்லாம் பாராட்டக்குரிய வகையில் காமெடி காட்சிகள் இருந்தது. ஆனால், இந்த படத்தில் ஒன்றுமே இல்லை.

வழக்கம்போல் தந்தைக்கும் மகனுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, வாக்குவாதம், கடைசியில் தந்தைக்காக மகன் போராடுவது என்று அதே கான்செப்டை தான் கொஞ்சம் கூட மாற்றாமல் இயக்கியிருக்கிறார்.

Location Diaries: When a heroine swooned- Cinema express


படத்தில் சசிகுமார்-சமுத்திரக்கனி காம்பினேஷன் அனைவருக்கும் தெரிந்தது தான். படத்தில் தந்தை-- மகன் பாச கதையாக இருந்தாலும் அதை கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் கதையை சென்று கொண்டு இருந்தால் நல்லா இருக்கும் என்று கூறுகிறார்கள்.

பிளஸ்:

படத்தில் நடிகர்கள் தங்களது கொடுத்த கதாபாத்திரங்களில் கனகச்சிதமாக நடித்துள்ளார்கள்.

மருத்துவ மூலிகைச் செடிகளைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.

அப்பா-- மகன் இடையேயான உறவு நன்றாக இருந்தது.

மைனஸ்:

அரைத்த மாவையே திரும்பி திரும்பி அரைத்து இருப்பதால் போர் அடிக்கும் வகையில் இருந்தது.

படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு மாற்றங்களும், காட்சிகளும் இல்லை.

படத்தில் ரசிக்கும் படியான காமெடி சீன்கள் எதுவும் இல்லாததால் படம் பிலப் தான். அ

இயக்குனர் கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். படத்தில் சொல்லிக் கொள்ளும் படியாக எதுவும் இல்லாததால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றம்.

மொத்தத்தில் 'எம் ஜி ஆர் மகன்'--- ரசிக்கும் படியாக எதுவும் இல்லை.

தலைப்புகள்
#எம் ஜி ஆர் மகன் விமர்சனம்#Mgr Magan Review#எம் ஜி ஆர் மகன்#Mgr Magan
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement