Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
4 ஆண்டுகள் கழித்து லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ருத்ரன்' எப்படி ? - முழு விமர்சனம் இதோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/விமர்சனம்2023.04.14பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 3 நிமிடம்

4 ஆண்டுகள் கழித்து லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ருத்ரன்' எப்படி ? - முழு விமர்சனம் இதோ.

A
எழுதியவர்Arun14 ஏப்ரல், 2023 அன்று 02:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ராகவா லாரன்ஸ். சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் ருத்ரன். இந்த படத்தை 5 ஸ்டார் தயாரிப்பாளர் கதிரேசன் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் ருத்ரன் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

4 ஆண்டுகள் கழித்து லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ருத்ரன்' எப்படி ? - முழு விமர்சனம் இதோ.

கதைக்களம்:

படத்தில் நாசர்- பூர்ணிமா ஆகியோரின் மகன் தான் ராகவா லாரன்ஸ். இவர் வேலை தேடி அலைகிறார். அப்போதுதான் பிரியா பவானி சங்கர் மீது காதல் ஏற்படுகிறது. நாசரின் நண்பர்கள் கடனை வாங்கி பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார்கள். இதனால் நாசர் மனம் உடைந்து இறந்து விடுகிறார். இதற்கிடையில் லாரன்ஸ்- பிரியா பவானி சங்கர் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த கையோடு வாங்கிய கடனை அடைப்பதற்காக ராகவா லாரன்ஸ் அமெரிக்கா செய்கிறார்.

சில ஆண்டுகளிலேயே மகளுடன் பிரியாவும் அங்கு செல்கிறார். வெளிநாட்டிலிருந்து தனியாக சென்னை திரும்பும் பிரியா காணாமல் போய்விடுகிறார். அதனை எடுத்து தன்னுடைய அம்மா பூர்ணிமாவின் இறப்பிற்கு லாரன்ஸ் ஊருக்கு வருகிறார். அப்போது பிரியா காணாமல் போன விஷயம் லாரன்சுக்கு தெரிகிறது. இதற்கு பின்பு சரத்குமார் இருப்பது தெரிய வருகிறது. துறைமுகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் டானாக சரத்குமார் இருக்கிறார்.

4 ஆண்டுகள் கழித்து லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ருத்ரன்' எப்படி ? - முழு விமர்சனம் இதோ.

மேலும், சரத்குமார் தம்பிகளை ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து கொலை செய்கிறார். இதற்கு சரத்குமார் பழிவாங்குகிறார். இறுதியில் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? பிரியா பவானி சங்கர் கிடைத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. காஞ்சனா 3 படத்திற்கு பின் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ராகவா லாரன்ஸ் படம் வெளியாகிறது. மிகச் சிறப்பாக லாரன்ஸ் நடித்திருக்கிறார். அதேபோல் நடனத்தில் அவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அதை மீண்டும் அவர் இந்த படத்தின் மூலம் நிரூபித்து விட்டார்.

இயல்பாகவே லாரன்ஸ் உடைய காமெடி எல்லாம் பயங்கரமாக இருக்கும். இந்த படத்தில் அவருடைய காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என எல்லாமே பட்டையை கிளப்பி இருக்கிறது. கதாநாயகியாக வரும் பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்கிறார். ஆனால், அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் இல்லை தான் சொல்லணும். இரண்டாம் கதை நகர்வதற்கு இவருடைய கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கிறது. டானாக வரும் சரத்குமார் முதல் காட்சியில் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் பெடல் எடுத்து இருக்கிறார்.

4 ஆண்டுகள் கழித்து லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ருத்ரன்' எப்படி ? - முழு விமர்சனம் இதோ.

கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். முதல் பாதி பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றிருக்கிறது. புது கதைகளம், ஆக்சன், காதல், காமெடி என அனைத்தையும் கொடுக்க இயக்குனர் கதிரேசன் முயற்சித்து இருக்கிறார். ஆனால், காட்சிகள் எல்லாம் பெரிதாக யூகிக்க கூடிய அளவில் இல்லை. சாதாரணமாகவே இருக்கிறது. இன்னும் கதையில் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கொடூர வில்லனாக சரத்குமாரை காண்பித்திருக்கிறார்கள். ஆனால் சில இடங்களில் அவருடைய கொடூர வில்லத்தனத்தை குறைத்து இருந்திருக்கலாம். ஒளிப்பதிவும், பின்னனி இசையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. வழக்கமான பழிவாங்கும் கதை தான். ஆனால், சுவாரஸ்யத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும், தாய் தந்தையை தனியாக விட்டு விடாதீர்கள் என்ற கருத்து இன்றைய காலத்து கட்டத்திற்கு சொல்லும் வகையில் இருக்கிறது.

4 ஆண்டுகள் கழித்து லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ருத்ரன்' எப்படி ? - முழு விமர்சனம் இதோ.

ஆக்ஷன் தவிர அனைத்தும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருபவர்களுக்கு இந்த படம் நன்றாக இருக்கும்.முதல் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இரண்டாம் பதிவு விறுவிறுப்பாக சென்றிருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருந்திருக்கிறது. ஆக மொத்தம், குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் பக்கா என்டர்டைன்மென்ட் படமாக அமைந்திருக்கிறது.

நிறை:

ராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் டான்ஸ்

பூர்ணிமா, சரத்குமார் நடிப்பு அருமையாக இருக்கிறது

சென்டிமென்ட் ஆக்சன் காமெடி எல்லாம் ஓரளவிக்ரு கைகொடுத்து இருக்கிறது.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

இரண்டாம் சுமாராக சூப்பர்

குறை:

வழக்கமான பழிவாங்கல் கதைதான்

ஆக்சன் காட்சி ஓவராக இருக்கிறது

முதல் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

திரைக்கதையில் இன்னும் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்

மொத்தத்தில் ருத்ரன்- லாரன்ஸ் திரை கேரியரில் மேலும் ஒரு தோல்விப்படம்

தலைப்புகள்
#ருத்ரன் விமர்சனம்#ragava lawrance#ராகவா லாரன்ஸ்#Rudhran Review#rudhran
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement