Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2019.12.20பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 3 நிமிடம்

செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனதா கார்த்திக்கு - தம்பி படத்தின் விமர்சனம் இதோ.

எழுதியவர்Rajkumar20 டிசம்பர், 2019 அன்று 03:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர் கார்த்திக் அவர்கள் தனது அண்ணி ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து “தம்பி” என்ற படத்தில் நடித்து உள்ளார். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இந்தப் படத்தையும் இயக்குகி உள்ளார். அதோடு கார்த்திக்கின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். மேலும், இவர்களுக்கு அம்மா, அப்பாவாக சீதா, சத்யராஜ் ஆகியோர் நடித்து உள்ளார்கள். அதோடு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி நடித்து உள்ளார். பொதுவாக தமிழ் சினிமாவில் அண்ணன்--தங்கை, அண்ணன்— தம்பி பாச கதைகள் தான் அதிகம் பார்த்திருப்போம்.

Image result for Thambi Movie  cover pics

இந்நிலையில் அக்கா– தம்பி பாசம் கொஞ்சம் கம்மி தான். சமீபத்தில் வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அக்கா– தம்பி பாசத்தை சொல்லி இருந்தார்கள். மேலும், இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளும், நிறைய சஸ்பென்ஸ் காட்சிகளும் வைத்து உள்ளார் இயக்குனர். கோவிந்தன் இந்த படத்திற்கு இசை அமைத்து உள்ளார். மேலும், அதிரடி ஆக்ஷன், சண்டைக் காட்சிகளும், அக்கா-தம்பி பாச போராட்டமும் நிறைந்த படமாக தம்பி படம் இன்று வெளியாகி உள்ளது. டேய் தம்பி வந்துட்டாண்டா!!!! போய் பார்க்கலாமா…

கதைக்களம்:

ஹீரோ கார்த்திக்(விக்கி) கோவிலில் ஒரு திருடனாக செல்வாக்கான வாழ்க்கையை ஜாலியாக கொண்டாடி வாழ்பவர். ஊட்டியில் பெரும் அரசியல் புள்ளியாக இருப்பவர் சத்யராஜ். அவருடைய மனைவி நடிகை சீதா. சத்யராஜ் அம்மா சவுகார் ஜானகி. சவுகார் ஜானகி அவர்கள் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இவர்களுக்கு மகளாக ஜோதிகா நடித்து உள்ளார். ஜோதிகாவின் தம்பி, சத்யராஜ் மகன் தான் சரவணன். அக்கா ஜோதிகா வீட்டை விட்டு ஓடிப் போன தம்பி சரவணன் திரும்பி வருவார் என்று 15 ஆண்டுகளுக்கு மேலாக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். ஒரு நாள் கார்த்திக்கை (விக்கி) போலீஸ் துரத்துகிறது. அதற்கு பின் தான் அவருடைய வாழ்க்கையே மாறிப் போகிறது.

Related image

சத்யராஜ் அவர்கள் கார்த்திக்(விக்கி) தன் மகன் என்று நினைத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். மெல்ல மெல்ல கார்த்திக் அவர்கள் சத்யராஜ் குடும்பத்தோட பழகுகிறார். அக்கா ஜோதிகாவிற்கு தொலைந்து போன தன் தம்பியை நினைத்து சந்தோஷம் ஒருபக்கம், இத்தனை வருடங்களாக திரும்பி வரவில்லை என்ற கோபம் ஒரு பக்கதோடு இருக்கிறார். சரவணனின் காதலியாக அறிமுகமாகிறார் சஞ்சனா. பின் சரவணன் வருகையை அறிந்து சந்தோஷப்பட்டு அவரை காதலிக்க செய்கிறார். இதனை தொடர்ந்து மலைவாழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. மலைவாசி மக்கள் கார்ப்பரேட் நிறுவனத்தின் மூலம் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மலைவாசி மக்கள் நிலத்திற்காக சத்யராஜ் போராடி வருகிறார்.

இதனால் சத்யராஜ் அவர்களுக்கு பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது. பின் கார்த்திகை கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள். உண்மையிலேயே சத்யராஜின் மகன் யார்? கார்த்திக் எதற்காக இந்த வீட்டிற்கு வந்தார்? சத்யராஜின் மகன் எதனால் காணாமல் போனார்? கொலைகார கும்பலில் இருந்து கார்த்திக் தப்பிக்கிறாரா?? கார்த்திகை ஏன் கொலை செய்ய நினைக்கிறார்கள்?? கடைசியில் ஜோதிகா தன் தம்பியை ஏற்றுக் கொள்கிறாரா?? என பல முடிச்சுகள் அவிழ்ப்பது தான் மீதி கதை. கார்த்திக் தம்பி படத்தில் ஒரு திருடனாகவும், மகனாகவும் அற்புதமாக நடித்து உள்ளார்.

Related image

மேலும், தைரியமான பெண்ணாக, கண்டிப்புடனும் பாசத்துடன் இருக்கும் அக்கா கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக ஜோதிகா நடித்துள்ளார். ஜோதிகா அவரின் கோபம் அமைதி எல்லாம் வேற லெவல்ல உள்ளது. நடிகர் சத்யராஜ் அவர்கள் வழக்கம் போல் இந்த படத்திலும் தூள் கிளப்பியுள்ளார். ஒரு தந்தையாகவும், ஊர் தலைவராகவும் வரும் பிரச்சனைகளை சமாளித்து கொண்டு அவருடைய கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார். காமெடி, ஆக்ஷன், காதல், பாசம்,கோபம் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக தம்பி உள்ளது. கோவிந்தன் இசையில் பாடல்களும் ஒன்றும் அலப்பறை இல்லாமல் உள்ளது.

பிளஸ்:

படத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி ஆக உள்ளது.

படத்தின் இசை அலப்பறைகள் இல்லாமல் உள்ளது.

அக்கா– தம்பி பாசம் உணர்வுப் பூர்வமான கதை ஆக உள்ளது.

சத்யராஜ், ஜோதிகா, கார்த்திக் இவர்களின் நடிப்பு புதுமையாக இருந்தது.

Related image

மைனஸ்:

முதல் பாதி மெதுவாக செல்வது போன்று ஒரு ஏக்கம்.

படம் பெரிதாக சொல்லி கொள்ளும் அளவு இல்லை.

படத்தின் காமெடிகள், ரோமன்ஸ் கொஞ்சம் இருந்திருக்கலாம்.

படத்தின் அலசல்:

இந்த படத்தில் இயக்குனர் போட்டு விட்ட அனைத்தும் முடிச்சுகளும் சுவாரசியமாக இருந்தது. அடுத்தது என்ன அடுத்தது என்ன என்ற ஆர்வத்துடன் ரசிகர்களை பார்க்கத் தூண்டிய படம். மொத்தத்தில் தம்பி படம் கார்த்திக்கு பக்க பலம். நம்மை கதை உள் நோக்கி செல்ல வைக்கிறது.

தலைப்புகள்
#கார்த்தி#Thambi Review#karthi#தம்பி விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement