Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Tu1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/விமர்சனம்2024.05.24பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மம்முட்டியின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு? TURBO -முழு விமர்சனம் இதோ

A
எழுதியவர்Arun24 மே, 2024 அன்று 02:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மலையாள சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நடிகர் மம்முட்டி தான். இவர் தன்னுடைய நடிப்புத் திறனுக்காக தேசிய விருது மட்டும் நான்கு தடவை வாங்கியுள்ளார். தற்போது இவர் மலையாளத்தில் வைஸாக் இயக்கத்தில் 'Turbo' என்ற படத்தில் நடித்திருக்கிறார். நடிகர் மம்மூட்டியே தயாரித்திருக்கும் இப்படத்தில் கிரிஸ்டோ சேவியர் இசை அமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

மம்முட்டியின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு? TURBO -முழு விமர்சனம் இதோ

கதைகளம்:

கேரளாவில் அடிதடி சண்டை என கோபக்கார நபராக தனது அம்மாவுடன் வசித்து வருபவர் மம்முட்டி. சண்டை என்று வந்து விட்டால் இறங்கி அடிக்கும் இவர்,தனது அம்மாவுக்கு மட்டும் பயந்த பிள்ளையாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது நண்பர் ஜெர்ரியின் காதலை சேர்த்து வைப்பதற்காக இந்துலேகாவை கடத்தி வரும் மம்முட்டி, அவருடனே சென்னைக்கு செல்லும் சூழல் ஏற்படுகிறது.

மறுபுறம் சென்னையில் செல்வாக்கான நபராக வளம் வரும் வெற்றிவேல் சண்முக சுந்தரம்(ராஜ் பி. ஷெட்டி), எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கி தனது ஆதரவு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று முயற்சிக்கிறார். அதற்காக அவர் செய்யும் மோசடி மம்மூட்டியின் நண்பரான ஜெர்ரிக்கு தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையில் தனது நண்பருக்காக வெற்றிவேலுடன் மம்மூட்டி மோதும் சூழல் உருவாகி, இறுதியில் எப்படி அவரை வீழ்த்தினார் என்பதை மீதிக்கதை.

மம்முட்டியின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு? TURBO -முழு விமர்சனம் இதோ

மலையாளத்தில் போக்கிரிராஜா, புலிமுருகன் போன்ற படங்களை இயக்கிய வைஸாக் இப்படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க கமர்சியல் படமாகவே உருவாகியுள்ள இப்படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு குறைவில்லை. மேலும் மம்முட்டிக்கு 72 வயது ஆகிறது என்று, அவரே சொன்னால் தான் தெரியும் அளவிற்கு துடிப்புடன் 'டர்போ ஜோஸ்' என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் சூழலே கதை பின்னணியாக இருக்கும் இப்படத்தில், வில்லனாக ராஜ் பி.ஷெட்டி தனது வாய்ஸ் மற்றும் பாடிலேங்குவெஜால் மிரட்டி இருக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில் காமெடி சிறப்பாக செய்திருக்கிறார்.

மம்முட்டியின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு? TURBO -முழு விமர்சனம் இதோ

முழுமையான கமர்சியல் படம் என்பதால் லாஜிக்குக்கு இடமில்லை. எனினும் மம்முட்டிக்கு நடிப்பதற்கான காட்சிகள் இல்லாவிட்டாலும் சண்டைக் காட்சிகளில் அடித்து நொறுக்கியுள்ளார். ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை விறுவிறுப்பாக கொண்டு போன இயக்குனர், கிளைமேக்ஸில் இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுக்கும் வகையில் தமிழ் நடிகரின் வாய்ஸ் வைத்திருப்பது ஆச்சரியம்.

நிறை:

தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் சூழலை இயக்குனர் காண்பித்திருக்கிறார்.

மம்முட்டியின் ஆக்சன் காட்சிகள் நன்றாக இருக்கிறது.

விறுவிறுப்பான திரைக்கதை.

ஒளிப்பதிவு, இசை எல்லாம் ஓகே

குறை :

படத்தில் லாஜிக் இல்லை

இயக்குனர் வழக்கமான கதையை படமாக எடுத்துள்ளார்

படத்தில் வரும் காட்சிகள் யூகிக்கக்கூடியதாக இருந்தன.

மொத்தத்தில் TURBO - சுமார்

தலைப்புகள்
#turbo#behindtalkies#Mammootty
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement