‘ஜால்ரா அடிச்சி அடிச்சி வந்தாச்சு’ தன் வளர்ச்சி பற்றி போட்ட பதிவை கேலி செய்தவருக்கு பிரசாந்த் கொடுத்த பதிலடி.

0
1114
- Advertisement -

ஒரு காலத்தில் தான் வார இறுதியில் டாப் 10 நிகழ்ச்சியை பார்த்து புதிதாக வெளியாகும் படங்களின் விமர்சனங்களை நாம் பார்த்து வந்தோம். ஆனால், சமீப வருடங்களாக ஒரு திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடுயூபில் விமர்சங்களாக வந்து விடுகிறது. அதிலும் தமிழில் விமர்சனசம் செய்யும் யூடுயூப் சேனல்கள் ஏராளம். இதில் ஒரு சிலர் மாபெரும் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் பிரசாந்தும் ஒருவர்.

-விளம்பரம்-

முகநூல்,ட்விட்டர் வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு மக்கள் மத்தியில் சிறிதளவு செல்வாக்கு இருக்கும் நிலையில் அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வேலையை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அப்படி யூடுயூப் விமர்சனம் செய்யும் நபர்களில் பிரசாந்த் மிகவும் முக்கியமாணவர்.

இதையும் பாருங்க : சைஸ் ஜீரோ படத்தின் போது எடுக்கப்பட்ட பாகுபலி காட்சி – VFX மூலம் அனுஷ்காவை எப்படி ஸ்லிம்மா ஆக்கி இருகாங்க.

- Advertisement -

மற்ற விமர்சகர்களை விட இவரது விமர்சனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவிடுகிறது. இவரை பாண்டா பிரசாந்த் என்று மக்கள் மத்தியில் செல்லப்பெயரை வாங்கிய இவர் சினிமாவில் கூட தனது தடத்தை பதித்து விட்டார். ஆனால், தன்னை கேலி செய்பவர்களுக்கு கூட அழகான அட்வைஸ்சை செய்து ஆப் செய்துவிடுவார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தின் தன்னுடைய கதாபாத்திரத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். அதிலும் தனது யூடுயூப் பக்கத்தில் பதிவிட்ட முதல் வீடியோவுடன் ஒப்பிட்டு ‘இங்கே இருந்து தற்போது இங்கே வந்திருக்கிறேன்’ என்று தன் கடின உழைப்பை குறிக்கும் வகையில் பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் ஒரு சிலர், பிரசாந்தின் இந்த பதிவையும் கலாய்த்தனர். அந்த வகையில் ட்விட்டர் வாசி ஒருவர், இதுல பெருமை படரத்துக்கு ஒன்னும் இல்லடா என்று மோசமான வார்த்தையில் திட்டி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த பிரசாந்த் ‘நன்றி உங்களுக்கு 19 வயது இருக்கும். நீங்கள் உங்கள் தந்தையின் பணத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள், நீங்கள் வளர்ந்த பின்னர் வாழ்க்கை உங்களை பணிவான நபராக மாற்றும், வாழ்த்துக்கள்’ என்று கூறியிருந்தார் இதற்கு மற்றொரு ட்விட்டர் வாசி ‘ஜால்ரா அடிச்சி அடிச்சி வந்தாச்சு’ என்று கேலி செய்ய அதற்கு பிரசாந்த் நீ அடி வரையான பார்ப்போம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Advertisement