-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

நீ இந்த பக்கமே வந்து விடாதே என்று வீட்டு கேட்டை பூட்டி விட்டார் – இளையராஜா வைரமுத்து பிரச்சனை குறித்து சொன்ன பிரபலம்.

0
2949

இளையராஜா- வைரமுத்து பிரிந்ததற்கான காரணம் குறித்து செய்யாறு பாலு அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசையை விரும்பாத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது. என்னதான் இசையில் ஜாம்பவான் என்றாலும் பொது வாழ்வு என்று வந்துவிட்டால் இளையராஜா ஒரு டெரர் பீஸ் தான்.

-விளம்பரம்-

இதுவரை பல்வேறு முறை பல விதமாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இளையராஜா. அதிலும் சமூக வலைத்தளம் வந்த காலம் முதல் இவர் அடிக்கடி ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். இவரது தலைக்கனமான பேச்சுக்கள் பல முறை ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது. இவர் பிரபலங்களை அவமதித்து நடந்து இருக்கிறார். அதோடு சமீப காலமாக இளையராஜா குறித்து பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இளையராஜா-வைரமுத்து சர்ச்சை குறித்து தான் தற்போது இங்கு பார்க்க போகிறோம். ஒரு காலத்தில் வைரமுத்துவும் இளையராஜாவும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரின் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

செய்யாறு பாலு அளித்த பேட்டி:

ஆனால், ஏதோ சில காரணங்களால் இருவருமே பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் செய்யாறு பாலு இவர்களுடைய பிரிவு குறித்து கூறியிருந்தது, இளையராஜா உடைய இசை பெரியளவில் பிரபலம் ஆவதற்கு வைரமுத்துவின் வரிகள் தான் முக்கிய காரணம். இளையராஜா மார்க்கெட்டின் உச்சத்திலிருந்து போது அவரிடம் ஒரு பத்திரிகை தொடர் எழுதி தர கேட்டது. இளையராஜா சொல்ல அதை பத்திரிக்கையாளர் தன்னுடைய டேப் ரெக்கார்டில் பதிவு செய்து எழுத வேண்டும்.

வைரமுத்து-இளையராஜா நட்பு:

-விளம்பரம்-

பின்னர் அதை இளையராஜாவுக்கு அனுப்பி செக் செய்துவிட்டு அதை பத்திரிக்கையில் பப்ளிஷ் செய்யவேண்டும் என்பது தான் ஒப்பந்தம். முதலில் இதற்கு இளையராஜா ஓகே சொல்லிவிட்டார். ஆனால், திடீரென்று மனம் மாறி இளையராஜா நான் தொடராக அனுப்புகிறேன் என்று சொல்லிட்டார். அப்போது வைரமுத்துவும் இளையராஜாவும் நல்ல நண்பர்கள். இதனால் வைரமுத்துவிடம் இளையராஜா தனக்கு எழுதித்தர கேட்டார். வைரமுத்துவம் எழுதித் தருகிறேன் என்று சொன்னார். ஆனால், இளையராஜா அதற்கு ஒரு கண்டிஷன் போட்டார்.

-விளம்பரம்-

வைரமுத்து-இளையராஜா ஒப்பந்தம்:

அதாவது வைரமுத்து எங்கேயும் இளையராஜாவுக்கு நான் தான் உதவி செய்தேன் என்று சொல்லக்கூடாது என்று கூறினார். வைரமுத்துவும் அதற்கு சரி என்று ஒத்துக் கொண்டார். பின் அந்த தொடர் பத்திரிகையில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதனால் இளையராஜாவுக்கு மிகப்பெரிய புகழ் வந்தது. இதை பார்த்த வைரமுத்துவால் பொறுமையாக இருக்க முடியவில்லை. பின் ஒரு பேட்டியில் இளையராஜாவிடம் கொடுத்த ஒப்பந்தத்தையும் மீறி நான் தான் அந்த தொடரை எழுதிக் கொடுத்தேன் என்று வைரமுத்து கூறினார்.

கோபப்பட்டு இளையராஜா சொன்னது:

இதை பார்த்தவுடன் இளையராஜா மிகவும் கோபப்பட்டு, நீ இந்த பக்கமே வந்து விடாதே என்று வீட்டு கேட்டை பூட்டி விட்டார். அன்றிலிருந்து தான் இருவருக்கும் மத்தியில் வெறுப்பு உருவானது. இளையராஜா கைவிட்ட பிறகு தான் ஏ ஆர் ரகுமானிடம் வைரமுத்து கூட்டணி வைத்தார். தொடர்ச்சியாக வைரமுத்துவுக்கு எழுதும் வாய்ப்புகள் கிடைத்தது. பின் பல பேர் இளையராஜாவிடம் சென்று சமாதானம் பேசினார்கள். ஆனால், இளையராஜா கேட்கவில்லை. அந்த அளவிற்கு இளையராஜா பிடிவாதமாக இருந்ததால் இன்றும் அவர் அந்த பிடிவாத்தை கடைபிடித்து வருகிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news