பிணத்தை பார்க்க விடலை, தெருவில் நின்று அழுத கங்கை அமரன்- இளையராஜாவின் வன்மம்

0
4865
- Advertisement -

கங்கை அமரன் கதறி எழுதும் பிணத்தை பார்க்க இளையராஜா அனுமதிக்கவில்லை என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர்கள் இளையராஜா- கங்கை அமரன். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருப்பது அனைவருக்கும் அறிந்த ஒன்று. ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் இணைந்து ஒன்றாக பணியாற்றினார்கள்.

-விளம்பரம்-

இதனிடையே தன்னை படம் இயக்கவோ, இசையமைக்கவோ இளையராஜா அனுமதித்ததில்லை. இதை கங்கை அமரன் ஒருமுறை பேட்டியில் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இதுபோல் பல விஷயங்கள் இருவருக்குமிடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் கங்கை அமரனுக்கும் இளையராஜாவுக்கும் சின்னராமசாமி பெரியராமசாமி பட தயாரிப்பின் போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

கங்கை அமரன்-இளையராஜா சந்திப்பு:

அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் பேசிக்கொள்வது இல்லை என்றும், எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் சந்தித்துக் கொண்டதும் இல்லை என்றும் தகவல்கள் வெளியானது. பின் கடந்த ஆண்டு தான் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்தார்கள். இதை இரு குடும்பத்தினர்களும் பிரமாதமாக கொண்டாடினார்கள். சோசியல் மீடியாக்கள் எல்லாம் இது குறித்த புகைப்படங்கள் வெளியானது. இதற்கு பின் கங்கை அமரனும் இளையராஜா குறித்து நல்ல விதமாக பேட்டி எல்லாம் அளித்திருந்தார்.

இளையராஜா மனைவி இறப்பு:

இந்த நிலையில் கங்கை அமரன்- இளையராஜா இருவரும் சண்டையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்வை குறித்து தற்போது செய்யாறு பாலா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், இளையராஜா ஒரு நல்ல இசையமைப்பாளர். ஆனால், அவர் ஒரு நல்ல மனிதர் என்று சொல்லிவிட முடியாது. இளையராஜாவின் மனைவி தீபா இறந்து விடுகிறார். அவரின் உடல் திநகரில் வைக்கப்பட்டிருக்கிறது. கங்கை அமரன் அங்கிருந்து அழுது கொண்டே ஓடி வந்தார்.

-விளம்பரம்-

கங்கை அமரன் செய்த செயல்:

ஆனால், இளையராஜா தீபாவின் உடலை பார்ப்பதற்கு கங்கை அமரனை அனுமதிக்கவே இல்லை. கங்கை அமரன் இதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டே இருந்தார். பின் அம்மாவிற்கு பிறகு அன்னி கையில் தான் சோறு சாப்பிட்டேன் என்று பயங்கரமாக அழுதார். இதை பார்த்து அங்கிருந்த சீனியர் இசையமைப்பாளர்கள் எல்லாம் இளையராஜாவை கண்டித்தார்கள். பின் இது மீடியாவில் வெளிவந்து விடும் என்ற எண்ணத்தில் பயந்து கொண்டு தான் இளையராஜா கங்கை அமரனை உள்ளே விட அனுமதித்தார் என்று கூறியிருக்கிறார் .

இளையராஜா குறித்த தகவல்:

தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசையை விரும்பாத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது. என்னதான் இசையில் ஜாம்பவான் என்றாலும் பொது வாழ்வு என்று வந்துவிட்டால் இளையராஜா ஒரு டெரர் பீஸ் தான்.

Advertisement