திருமணம் செஞ்சுகிறாயா? எனக்கு ஒரு புருஷன்லா பத்தாது. ரசிகர்களை தெறிக்க விட்ட ரித்திகா.

0
8996
Rithika-Singh
- Advertisement -

சினிமா துறையை பொருத்தவரை ஒரு சில நடிகைகள் நடிக்க வருவதற்கு முன்பாக மாடல் அழகிகளாகவோ விளம்பரத்தில் நடித்த நடிகைகளாக தான் இருப்பார்கள். ஆனால், குத்துச்சண்டை மேடையில் அதிரடி பெண்ணாக இருந்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரித்திகா சிங். தமிழில் 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதி சுற்று” படத்தில் கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங். அந்த படத்திற்கு பிறகு தமிழ், தெலுகு என்று ஒரு சில படங்களில் நடித்த இவர், தற்போது தனது உடலை மெருகேற்றிக்கொண்டு வருகிறார். 

-விளம்பரம்-
Related image

- Advertisement -

23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரே போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார். 2013 இல் இவரை ஒரு விமானப்பயணத்தின் போது கண்ட இறுதி சுற்றின் இயக்குனர் சுதா இவருக்கு நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இவரை இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகதிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் சுதா. 

இதையும் பாருங்க : பல ஆண்டுகளுக்கு பின்னர் நேரில் சந்திக்கப்போகும் ரஜினி மற்றும் அஜித். எப்படி தெரியுமா ?

இறுதி சுற்று படத்திற்கு பின்னர் தமிழில், விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்தார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் இந்த படத்தின் விளம்பரத்துக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் ஈடுபட்டிருந்தார் அப்போது ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டிருந்தார் அதற்கு பதிலளித்த ரித்திகா சிங் எனக்கு ஒரு கணவர் எல்லாம் பத்தாது எனக்கு நாலு ஐந்து கணவர்கள் வேண்டும் என்று கூறியிருக்கிறார் இதனைக் கேட்ட ரசிகர்களும் சாக்கடைந்துள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for oh my kadavule

மேலும், மற்றொரு ரசிகர் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரித்திகா எனக்கு குடிப்பழக்கம் கிடையாது ஆனால் பப்புக்கு சென்று வெறித்தனமாக நடனம் ஆடுவேன் என்று கூறியுள்ளார் ஏற்கனவே தன்னுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்றால் ஓவியமே படத்தில் இடம்பெற்ற பாடல் வீடியோவாக எடுத்து அனுப்புங்கள் அதில் சிறந்த வீடியோவை அனுப்பு அவர்களுக்கு என்னுடன் டேட்டிங் செல்ல வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நடிகை ரித்திகா சிங் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement