தெலுங்கு பட ப்ரோமோஷனுக்கு படு கவர்ச்சியான உடையில் வந்த KKKA பட நடிகை ரித்து வர்மா.

0
1218
rithu
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியான படங்களில் பல படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் கொரோனா பிரச்சனைக்கு முன்னர் வெளியான எதிர் பார்பே இல்லாமல் பல திருப்பங்களுடன் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் பெரிய அளவில் பேசப்பட்டது . மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் 25 வது படம் தான் இந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் குறைவான கதாபாத்திரங்கள் மட்டுமே முக்கிய ரோலில் செய்திருந்தார்கள். அதில் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமான ஆட்களாக துல்கர், கௌதம் மேனன், ராட்ஷன் என்று சிலர் மட்டும் தான் இருந்தார்கள். ஆனால், இந்த படத்தின் கதாநாயகியை பலரும் முதல் முறை ஒரு கதாநாயகியாக பார்த்தாலும், இந்த பொண்ணை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்ற கேள்வி உங்களுக்கு படம் பார்த்த போது நிச்சயம் ஓடிக்கொண்டு இருந்திருக்கும்.

இதையும் பாருங்க : உலகின் மிக உயரமான மலையில் தேசியக்கொடியுடன் ஏறிய விஜய், ரஜினி பட நடிகை.

- Advertisement -

ஆம், அது உண்மை தான். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவரின் பெயர் ரித்து வர்மா. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மாடல் அழகியான இவர் 2013 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பாட்சா’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘VIp 2’ படத்தில் தான்.

vip படத்தின் முதல் பாகத்தில் தனுஷ் வேலை செய்யும் கம்பெனி ஓனர் பெண்ணாக சுரபி நடித்திருப்பார். அவரது கதாபாத்திரத்தில் தான் நடிகை ரித்து வர்மா Vip 2 படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னரே இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து இருந்தார். தற்போது தெலுங்கில் படு பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது VaruduKaavalenu என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் படு கவர்ச்சியான உடையில் வந்து பலரை கவர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement